தமிழகத்தில் வன்முறைக்கு இடமில்லை-கருணாநிதி
சென்னை:தமிழகத்தில் வன்முறைச் செயல்கள் இடம் பறுவதை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துகருணாநிதி பேசுகையில், இலங்கைக்கு கடத்திச் செல்லப்படவிருந்த இரும்பு உருளைகள் பிடிபட்ட விவகாரம்,இலங்கை அமைதிப் பேச்சுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையும்.
அனைவரும் கடந்த கால சம்பவங்களை மறந்து சுமூகத் தீர்வை நோக்கி ஒரே திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளநிலையில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அந்த முயற்சிக்குப் பாதிப்பையே கொடுக்கும்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தமிழ் அகதியான சிவா என்கிற சிவகரன், மண்டபம் முகாமிலிருந்துதப்பியவர். இவரை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்தனர். ஜனவ> 23ம் தேதி இவரும்,மேலும் 7 பேரும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து இரண்டு வாகனங்கள், 40 பை நிறைய இரும்பு உருளைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம், 3செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அவை மும்பையில் வாங்கப்பட்டு சென்னை வழியாக கொண்டு செல்லப்படவிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவகரன் கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குயில் பிரபாகரன் என்பவர் பிடிபட்டுள்ளார்.அவரிடமிருந்து 60 பை இரும்பு உருளைகள் பிடிபட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக போலீஸின் தனிப்படைமகாராஷ்டிரா விரைந்துள்ளது. மேல் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் வன்முறைச் செயல்கள் நடக்க ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது .
இலங்கைப் போராளிகள் தமிழகத்தில் ஊடுறுவி விட்டதாக கூறி தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த சிலர்முனைகிறார்கள். ஆனால் தமிழகம் அமைதியாகத்தான் உள்ளது. எந்த ஊடுறுவலும் இல்லை.
இங்குள்ள எதிர்க்கட்சியினருக்கும், தமிழக மக்களுக்கும் நான் உறுதியாக கூறுவது என்னவென்றால், எனது அரசுஅனைத்து வகையான வன்முறைச் செயல்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும், வன்முறைக்கு இடம்தர அனுமதிக்க மாட்டோம் என்றார் கருணாநிதி.
சட்டசபை ஒத்திவைப்பு:கருணாநிதியின் உரையைத் தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அவையை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானத்தை அவை முன்னவர் அன்பழகன் கொண்டு வந்தார். அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கியது. சென்னை மாநகராட்சித் தேர்தல்வன்முறையைக் கண்டித்து ஆளுநர் உரையையும், மற்ற நாட்களில் சபை நடவடிக்கைகளையும் புறக்கணித்ததுஅதிமுக.
கடைசி நாளான இன்று அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சபாநாயகரால்வெளியேற்றப்பட்டனர். இந்தக் கூட்டத் தொடரில் 3 முக்கிய மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications