18 வருடமாக நடக்கும் கிட்னி திருட்டு!
சென்னை:சென்னையில் கடந்த 18 வருடங்களாக சிறுநீரக திருட்டு நடந்து வருவதாக சிபிசிஐடி போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சிறுநீரக புரோக்கர்கள் 2 பேரும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சென்னை அருகே எண்ணூர் சுனாமிக் குடியிருப்பில் வசிக்கும் பெண்களின் ஏழ்மையை சாதகமாக்கி அவர்களுக்குசொற்ப பணத்தைக் கொடுத்து சிறுநீரகங்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மல்லிகா என்ற பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடிபோலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மதுரையில் மல்லிகாவுக்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவரான புரோக்கர் ராஜூவை ஏற்கனவேமதுரையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இவரைத் தொடர்ந்து திருச்சியைச் சேர்ந்த சீனி பாய், காதர்ஷெஙுப் (சீனிபாயின் சகோதரியின் கணவர் இவர்) ஆகியோரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருவரும் திருச்சியில் கைது செய்யப்பட்டு ராஜுவையும் சேர்த்து 3 பேரும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் சீனிபாய்தான் முக்கியக் குற்றவாளி என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் துருவித் துருவி விசாராணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 3 பேர் மீதும் மோசடி, ஆள் மாறாட்டம்,சதிச் செயல், பொய்யான ஆவணம் தயாரித்தல், உண்மையை மறத்தல் ஆகிய பி>வுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீஸா>டம் காதர் ஷெரீப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். போலீஸாரிடம் அவர்கூறியிருப்பதாவது:
திருச்சியில் நான் பேக்கரி நடத்தி வருகிறேன். முதல் மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் சீனி பாயின்விதவை சகோதரியை திருமணம் செய்து கொண்டேன்.
கடந்த 1988ம் ஆண்டு எனது ஒரு சிறுநீரகத்தை நான் நல்ல பணத்திற்கு விற்றேன். அதில் நல்ல வருமானம்கிடைக்கும் என்பதை அறிந்த நான் சிறுநீரகத்தை விற்க ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறினேன்.
இதற்காக மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டேன். சிறுநீரகம் தேவைப்படுகிறது என எனக்குப்போன் வந்ததும், ஆட்களைத் தேடும் முயற்சிகளில் குதிப்பேன். ஆளைக் கூட்டிப் போனால் எனக்கு கமிஷனாகரூ. 10,000 கிடைக்கும்.
இந் நிலையில் துபாயில் வேலை பார்த்து வந்த மைத்துனர் சீனி பாய், 2003ம் ஆண்டு முதல் என்னுடன்இத்தொழிலில் ஈடுபட்டார். 18 வருடமாக இந்த புரோக்கர் தொழிலை செய்து வருகிறோம். 25 பேரிடம்சிறுநீரகங்களை எடுத்துள்ளோம். ரூ. 3 லட்சம் வரை சம்பாதித்துள்ளோம்.
நாங்கள் சம்பாதித்தது குறைவுதான். ஆனால், டாக்டர்களும், மருத்துவமனைகளும் மிகப் பெரிய அளவுக்குசம்பாதித்துள்ளனர் என்று கூறியுள்ளார் காதர் ஷெஙுப்.
57 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்:
இதற்கிடையே தமிழகம் முழுவதும் உள்ள 57 மருத்துவமனைகளுக்கு சிபிசிஐடி போலீஸார் சிறுநீரக அறுவைச்சிகிச்சை குறித்த விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த 57 மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் சிறுநீரக தானம் செய்ய அரசின் அனுமதி உள்ளது. ஆனால் இந்தமருத்துவனைகளில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளதாக போலீஸாருக்குசந்தேகம் எழுந்துள்ளது.
மோசடியாக திருடப்பட்ட சிறுநீரகங்களை மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குபொறுத்தியுள்ளதாகவும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
அதில், கடந்த 6 வருடங்களில் நடந்த அறுவைச் சிகிச்சைகள், யார் யாருக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன,யார் யார் தானமாக கொடுத்தார்கள், அவர்கள் யார் என்ற விவரம் (உறவினர்களா, நண்பர்களா என்ற விவரம்)உள்ளிட்டவற்றை அறிக்கையாக தயாரித்து நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும் என 57மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை மற்றும் மதுரையில் தலா நான்கு மருத்துவமனைகளில்தான் அதிக அளவில் சிறுநீரக திருட்டுநடந்துள்ளதாக போலீஸார் உறுதியாக நம்புகின்றனர். எனவே இந்த 8 மருத்துவமனைகளிலும் தீவிர விசாரணைநடத்தப்படவுள்ளது.
சிறுநீரக திருட்டால் ஏமாந்தவர்கள் சிபிசிஐடி போலீஸா>டம் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீஸார்அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக தொலைபேசி மூலமும் தகவல் தெ>விக்கலாம். புகார் தெரிவிக்க வேண்டியதொலைபேசி எண்: 044- 25368913
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications