வைகோவுக்கு எல்.ஜி-செஞ்சி புதிய கிடுக்கிபிடி
சென்னை:மதிமுக பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக தங்களை நீக்கி வைகோ தலைமையில் நடந்த மதிமுக பொதுக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். எனவே, அந்தத் தீர்மானமும்,பொதுக்குழுக் கூட்டமும் செல்லாது என்று அறிவிக்கக் கோரி எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மதிமுகவில் அவைத்தலைவராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் நாங்கள் செயல்பட்டு வந்தோம்.வைகோவின் கட்சி நடவடிக்கை சரியில்லை என்பதால் அவரை விமர்சித்தோம். இதையடுத்து எங்களது கட்சிபொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக கம்பத்தில் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தீர்மானம் பாட்டனர்.
அது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடையும் விதித்துள்ளது.
ஆனால் கடந்த 10ம் தேதி வைகோ சென்னையில் கூட்டிய பொதுக்குழுக் கூட்டம், அவைத் தலைவரான நான்(கணேசன்) இல்லாமலேயே நடந்துள்ளது. முறையாக கூட்டப்படவில்லை.
மேலும், கோர்ட் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், எங்களை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாகநீக்குவதாக தீர்மானம் போட்டுள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
எனவே இதை கோர்ட் அவமதிப்பு செயலாக அறிவித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.
திங்கள்கிழமை நீதிபதி நாகப்பன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications