மருத்துவக் கல்லூரியில் நிர்வாணப்படுத்தி ராகிங்;ஜூனியர்கள் மீசை வைக்க சீனியர்கள் தடை!
சென்னை:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவர்களை மூத்த மாணவர்கள் நிர்வாணப்படுத்தியும்,ஆபாசப் படம் பார்க்க வைத்தும் ராகிங் செய்துள்ளனர். இதனால் பயந்து போன 2 மாணவர்கள் படிப்பேவேண்டாம் என சொந்த ஊருக்கு ஓடிப் போய் விட்டனராம்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.என்.ஏ. (ஆண் நர்ஸ் உதவியாளர்) என்ற படிப்பு உள்ளது.இந்தப் படிப்பை முடிப்பவர்கள் செவிலியர்களுக்கு உதவியாளராக பணியாற்ற முடியும்.
3 ஆண்டுகள் படிக்க வேண்டிய இந்த பட்டயப் படிப்பில் இந்த ஆண்டு 41 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களுக்குதனியாக விடுதி கிடையாது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் மாடியில்உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் ஆண்டு வகுப்பு துவங்கி ஓரிரு வாரங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் புதிதாக சேர்ந்தமாணவர்களை, மூத்த மாணவர்கள் ராகிங் செய்து கொடுமைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தங்கும் அறைகளுக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் தினமும்> இரவு 8 மணிக்குகுடித்துவிட்டு வந்து 11 மணி வரை தாங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்தியுள்ளனர்.
மேலும், தினமும் ஆபாசப் படத்தையும் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்துள்ளனர். இதை விடக் கொடுமையாக,அவர்களை நிர்வாணப் படுத்தி படம் எடுத்தும் கொடுமை செய்துள்ளனர்.
மேலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் யாரும் மீசை வைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது பெருசுகள்கூட்டம்.
"ராகிங் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையின் டீனிடம் சில மாணவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில்டீன் முகமது முஷ்டாக் அகமது கான் விசாரணை நடத்தினார். ராகிங் செய்யக் கூடாது என கடும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால் ராகிங் ராவடி குறையவில்லை எனத் தெரிகிறது.
"ராகிங் கொடுமையை தாங்க முடியாமல் கடலூரைச் சேர்ந்த முத்துகுமார், மணிமாறன் ஆகிய மாணவர்கள்படிப்டையே விட்டு விட்டு சொந்த ஊருக்குப் போய் விட்டனராம். மற்ற 39 மாணவர்கள் மீசையின்றி பரிதாபமாகஇரண்டாமாண்டு மாணவர்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications