ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து வழக்கு-ஜெ
சென்னை:சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில் புராதன வரலாறு கொண்ட ராமர் பாலத்தை இடிப்பதற்கு யாருக்கும்உரிமை இல்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேது சமுத்திரத் திட்டம் என்று கூறி மக்களை திசை திருப்பி, திமுக இடம் பெற்றுள்ள மத்திய அரசு மதுரையில்கேலிக்கு>ய விழாவோடு நிறுத்திக் கொள்ளாமல், மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வேலையில் தொடர்ந்துஈடுபட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தென்கோடி மீனவர் சமுதாயம் தொடர்ந்து பல்வேறு வகையானபோராட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தினால் என்னவெல்லாம் லாபம் என்று சொன்னார்களோஅவையெல்லாம் உண்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்ற ஐயத்திற்கு இன்னும் தெளிவான பதில் சொல்லப்படவில்லை. ஆழப்படுத்தும்பணியின்போது எடுக்கப்படும் மண்ணைக் கொட்டுவதில் நிலவும் பிரச்சினை இன்னும் நீடிக்கிறது.
இந்த்த திட்டத்தினால் 3600க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள், அரிய வகை டுகாங்வகை மீன்கள் அழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல மாங்குரோவ் காடுகள், உயிரினங்கள்,டால்பின்கள், திமிங்கலங்கள், பவளப் பாறைகள் அழியும் என எச்சரிக்கப்பட்டது. இவை அத்தனையும் இன்றுஉண்மையாகி வருகிறது.
இந்தத் திட்டத்தால் பயண நேரம் குறையும், செலவு குறையும் என கூறப்படுவதில் உண்மை இல்லை. இந்தக்கால்வாய் 12 மீட்டர் ஆழம் மட்டுமே கொண்டதாகும். இதனால் பெரிய கப்பல்கள் போக முடியாது, தரை தட்டிவிடும்.
மேலும் இந்த கால்வாய் வழியாக செல்லும் பிற கப்பல்களும் கூட வழக்கமான வேகத்தில் செல்ல முடியாது,மிதமான வேகத்தில்தான் செல்ல அனுமதிக்கப்படும். இதனால் எரிபொருள் தேவை 4 மடங்கு அதிகரிக்கும்.இதற்கு வழக்கமான பாதையே சிறந்தது என்ற முடிவுக்குத்தான் கப்பல் நிறுவனத்தினர் முன்வருவார்கள்.
ஆழப்படுத்தும் பணி என்ற பெயரில் வரலாற்றுச் சுவடுகளையும் அழிக்க முனைந்திருக்கிறார்கள். ராமர் பாலத்தைஉடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமர் பாலம் பண்டைய வரலாற்றுச் சுவடு. ராமாயாணத்தை நம்புகிறார்களோ இல்லையோ, ராமர் மீதானநம்பிக்கையை ஏற்கிறார்களோ இல்லையோ, அதை விமர்சிக்கிறவர்களும் கூட ராமாயண காவியத்தின்பின்னணியில் வரலாறு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
ராமர் பாலம் என இந்துக்களும், ஆதம் பாலம் என ஆங்கிலேயர்களும் அழைக்கும் அப்பாலத்தை, கடலுக்குஅடியில் உள்ள அப்பாலத்தின் வரலாற்றுத் தொன்மையை அமெரிக்காவின் நாசா நிறுவனமேஉறுதிப்படுத்தியுள்ளது.
தொன்மை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆலயங்கள், அரண்மனைகளை பாதுகாக்க அனைரும் தீவிரம்காட்டி வரும் நிலையில், ராமர் பாலத்தை உடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலரின் ஆதாயத்திற்காகபுராதன சிறப்பு கொண்ட ராமர் பாலத்தை இடிப்பதை ஏற்க முடியாது. அதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். அதை உறுதியாக மேற்கொள்வோம். எனவே உடனடியாகராமர் பாலத்தை இடிப்பதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications