சூரத்: பள்ளிக்கூடம் இடிந்து 13 மாணவிகள் பலி
சூரத்:சூரத் அருகே தீச்சக்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூட மாடிப்படி கைப் பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் 13மாணவிகள் பரிதாபமாக பலியாயினர். 14 மாணவிகள் காயமடைந்தனர்.
சூரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீச்சக்புரா என்ற இடத்தில் ஆதர்ஷ் நிவாசி ஷாரா என்றஉறைவிடப்பள்ளி உள்ளது. மலைவாழ் பழங்குடியின மாணவியருக்கான பள்ளிக்கூடம் இது.
இங்கு 13 வயது முதல் 16 வயது வரையிலான பழங்குடியின மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். நான்குமாடிகளைக்கொண்டது இந்தப் பள்ளி.
நேற்று மாலை 5.30 மணிக்கு மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் கைப்பிடிச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 13 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 14 பேர் படுகாயம்அடைந்தனர்.
இறந்தவர்களில் தர்மிஷ்டா செளத்ரி, பிரேமிகா செளத்ரி, பீரேம்பிகா செளத்ரி, தேஜால் காமிட் ஆகியோரின்உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவர்கள் யார் என்பதைக் கண்டறிய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் முழுவதும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பர்டோலி, காகர்புரா, சூரத் ஆகியஇடங்களில் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications