டெலிபோன் கட்டணம் மேலும் குறைகிறது!
டெல்லி:நாடு முழுவதும் தொலைபேசி கட்டணங்கள் மேலும் குறையும் என தொலை தொடர்பு ஒழுங்குமுறைஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இதுகுறுத்து டிராய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், உலகத்திலேயே இந்தியாவில்தான்தொலைபேசிகள் மற்றும் செல்போன்களின் மிகக் கட்டணங்கள் குறைவாக உள்ளன.
இதை இன்னும் குறைத்து தொலைபேசி மற்றும் செல்போன்களை பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கச் செய்ய தொலை தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
கட்டணங்களை குறைக்க, தற்போது ஏடிசி எனப்படும் உபகரணங்கள் இணைப்பு கட்டணம் தடையாகஇருக்கிறது. ஆண்டுதோறும் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்களது வருவாயில் 1.5 சதவீதத்தைபிஎஸ்என்எஸ் நிறுவனத்துக்கு ஏடிசி கட்டணமாக செலுத்தி வருகின்றன.
அதே போல இந்தியாவுக்கு வரும் சர்வதேச தொலைபேசி அழைப்புகளில் 1 நிமிட கட்டணத்தில் 1.ரூபாயையும், இந்தியாவில் இருந்து அழைக்கப்படும் சர்வதேச அழைப்புகளில் 80 பைசாவையும் தனியார்தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பிஎஸ்என்எல் வசூலிக்கிறது.
இந்த ஏடிசி கட்டணத்தை படிப்படியாக குறைத்து, இறுதியில் முழுமையாகவே ரத்து செய்துவிட தொலைதொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த ஏடிசி கட்டணத்தை தொலைதொடர்பு ஆணையம் குறைத்ததால் உள்நாட்டில் எஸ்டிடிகட்டணமும், ஐஎஸ்டி கட்டணமும் குறைந்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கானகட்டணங்களும் குறைந்தன.
ஆனால் இதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஏனென்றால் அதன் வருவாய்குறைந்தது.
கடந்த ஆண்டு (2005-2006) ரூ. 5,340 கோடியாக இருந்த ஏடிசி கட்டணம் நடப்பு ஆண்டு (2006-2007) ரூ.3,335 கோடியாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக பிஎஸ்என்எல் உள்பட அனைத்து தொலைபேசி சேவைகளை நடத்தும் நிறுவனங்களும்எஸ்டிடி கட்டணத்தை குறைத்து ஒரே இந்தியா திட்டத்தை அமல்படுத்த முடிந்தது என்றார்.
இந் நிலையில் ஏடிசி கட்டணத்தை ரத்து செய்தால் தொலைபேசி கட்டங்கள் மேலும் குறையும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications