கலாம் விமான மிரட்டல்-வாலிபருக்கு 4 மாத சிறை
சென்னை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயணம் செய்யவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து போலீஸாரை அலைக்கழித்தவழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி கலாம் சென்னை வந்திருந்தார். தனது நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இரவில் விமானம் மூலம் டெல்லி திரும்பவிமான நிலையம் வந்தார். அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் போன் வந்தது.
![]() |
இதனால் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. விமானத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை, அது வதந்திஎன்று தெரிய வந்தது.
இதையடுத்து புரளி கிளப்பிய நபருக்கு போலீஸார் வலை விரித்தனர். அதில் பேரின்பராஜ் என்ற வாலிபர் சிக்கினார். அவர் நகைக் கடை ஒன்றில்வேலை பார்த்து வந்தார். நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பே>ன்பராஜ் சார்பில் இலவச வழக்கறிஞருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜெகன்னாதன் வெளியிட்ட தீர்ப்பில், பேரின்பராஜ் தண்டனைக்கு>ய குற்றவாளிஎன்பது நிரூபணமாகிறது. அவரது டெலிபோன் பேச்சு விமான நிலைய பார்வையாளர்களுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் பீதியைஉண்டாக்கியுள்ளது.
இதனால் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளுக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் குடியரசுத் தலைவரின் பயணம் 2 மணி நேரம்பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. குடியரசுத் தலைவரை 2 மணி நேரம் காக்க வைத்தும், தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தியும் எதிரி குற்றம்புரிந்துள்ளார்.
இதனால் இந்திய தண்டனைச் சட்டம் 506 (1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் எதிரி தண்டிக்கப்படுகிறார். 506 (2)ன் கீழ் எதிரி குற்றம் புரியவில்லைஎன்பது தெளிவாகிறது.
எனவே 506(1)வது பி>வின் கீழ் 2 மாதம் கடுங்காவல் தண்டனையும், 507வது பிரிவின் கீழ் 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
ஏற்கனவே எதிரி சிறையில் இருந்து வருகிறார். எனவே சிறைக் காவலில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி எதிரியை விடுவிக்கிறேன்என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பேரின்பராஜ் விடுதலை செய்யப்பட்டார். தீர்ப்பைக் கேட்டதும் அவர் சந்தோஷம் அடைந்தார். வளர்ந்த தாடியும், நெற்றியில்விபூதியுமாக காணப்பட்ட பே>ன்பராஜ், தனது தந்தை ராஜகோபாலுடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஊருக்குக் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் நிரபராதி என்று எனது மனசாட்சிக்கும், கடவுளுக்கும் தெரியும். சந்தர்ப்பசூழ்நிலையில் நான் மாட்டிக் கொண்டேன்.
எனது ஊருக்குப் போய் டீ எஸ்டேட்டில் வேலை செய்து பிழைக்கப் போகிறேன் என்றார்.













Click it and Unblock the Notifications