காதல் தினத்துக்கு தடை கோரும் ராமதாஸ்!!
திண்டிவனம்காதலர் தினத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
திண்டிவனத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாடும் கலாச்சார சீரழவு நடந்து வருகிறது. இது தமிழர்கள் மற்றும் தமிழ்கலாச்சாரத்துக்கு எதிரானது. பாரம்பரியத்திற்கும் முரணானது. எனவே இதற்கு திமுக அரசு தடை விதிக்க வேண்டும்.
காதலர் தினம் என்று சொல்லிக் கொண்டு அந்த நாளில் இளைஞர்கள் தெருக்களில் அசிங்கம் செய்கிறார்கள். இதன் மூலம் இளைய சமுதாயம்சீரழிகிறது. காதலர் தினம் என்ற பெயரில் தெருக்களில் ஆடிப் பாடுவதும், ஆபாச செயல்களில் ஈடுபடுவதும், கலாச்சாரத்தைக் கெடுப்பதையும்அனுமதிக்க முடியாது.
காதலிப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது தனிப்பட்ட நிகழ்வாக இருக்க வேண்டும். மாறாக, அதை தெருவில் வந்தாகொண்டாடுவது? பொது இடத்தில் வைத்து நாலு பேர் பார்க்கும் வகையிலா கொண்டாடுவது?
பான்பராக், குட்கா என்று இருந்தது. இப்போது கஞ்சா சாக்லேட்டும் வந்துவிட்டது. இதெல்லாம் பள்ளி, கல்லூரிகள் அருகே மிக ஈசியாககிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. இதை விற்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போகிறோம்.
புதுச்சேரியில் சமீப காலமாக கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளும், விபச்சாரமும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது. சட்டம் அங்குசெயலிழந்துள்ளது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அங்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மருத்துவ உயர் படிப்பில் தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் 22.5 சதவீத இட ஒதுக்கீட்டை வரும்கல்வியாண்டில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை வரவேற்கிறேன். இட ஒதுக்கீடுவரலாற்றில் இந்தத் தீர்ப்பு மிக முக்கிய இடத்தைப் பெறும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு இது உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும். மருத்துவஉயர் கல்வியில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் சேர முடியாமல் இத்தனை காலம் அவர்கள் பட்ட அவதிகளுக்குதற்போது விடிவு ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவைப் பெறப் பாடுபட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், அமைச்சர் அன்புமணி ராமதாஸும்பாராட்டுக்குரியவர்கள். நாட்டில் உள்ள 25 கோடி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு அன்புமணிகொடுத்துள்ள பரிசு இது.
இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் படிப்புகளில் இனிமேல் தாழ்த்தப்பட்ட,பழங்குடியின மாணவர்களும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்என்றார் ராமதாஸ்.
தமிழர் என்பதால் கலாமை எதிர்ப்பதா?
முன்னதாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
குடியரசுத் தலைவரும், அலுவல் தொடர்பான அவரது நடவடிக்கைகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை. அதிலும் தனிப்பட்ட முறையிலானவிமர்சனங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
ஆனால் பால் தாக்கரே இதுவரை இல்லாத அளவுக்கு, அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில், அறுவறுக்கத்தக்க அளவுக்கு விமர்சனம்செய்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அப்சல் குருவின் கருணை மனு மீது அப்துல் கலாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகத்தான் இவ்வாறு விமர்சித்துள்ளார் பால் தாக்கரே.கருணை மனு மீது குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை.
மேலும், கருணை மனு மீதான முடிவை அறிவிப்பது குடியரசுத் தலைவர் என்றாலும், அதற்கான பரிந்துரையை செய்வது மத்திய உள்துறைஅமைச்சகம்தான். இந்த அடிப்படை உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் பால் தாக்கரே, கலாமை விமர்சித்துள்ளார்.
இதற்குக் காரணம், குடியரசுத் தலைவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அதை விட அவர் தமிழர் என்பதும்தான் முக்கியக் காரணம்.
அப்துல் கலாம் முன் அப்சல் குருவின் கருணை மனு மட்டும் பரிசீலனையில் இல்லை. மொத்தம் 24 மனுக்கள் அவரது பரிசீலனையில் உள்ளன.
எதற்கும் வகுப்பு வாத சாயம் பூசி, அரசியலாக்கி, ஆதாயம் தேட முற்படுகிற, இந்துத்துவா அமைப்புகள் அப்சல் குருவின் கருணை மனுவையும்அரசியலாக்க முற்படுவதும், அதில் குடியரசுத் தலைவரைத் தொடர்புப்படுத்தி விமர்சித்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும்.
குடியரசுத் தலைவரை விமர்சித்து அரசியலை தரம் தாழ்த்தி விட வேண்டாம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications