கிரிக்கெட் லைவ் டி.டியில் கட்டாயகிறது!
டெல்லி:இந்தியாவில் நடைபெறும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷனில் கட்டாயமாக ஒளிபரப்பும்வகையில் அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு நேரடி ஒளிபரப்பை சமீபகாலமாக தனியார் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி அதைதங்களுக்கு நல்ல விலை கொடுக்கும் தொலைக்காட்சிகளுக்கு விற்று வருகின்றன.
இதனால் தூர்தர்சனால் அதை ஒளிபரப்ப முடியாத சூழல் எழுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய, மேற்குஇந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கோடானு கோடி இந்திய கி>க்கெட்ரசிகர்களால் டிவியில் நேரடியாக கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு நீதிமன்றப் படியேறிய பின் ஒவ்வொரு போட்டியும் 7 நிமிட தாமதத்திற்குப்பின்னரே ஒளிபரப்பு செய்ய அனுமதி தரப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.இதையடுத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாபங்கேற்கும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளை இந்தியாவில் கட்டாயம் நேரடி ஒளிபரப்புச் செய்யும் வகையில்,அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்திற்கு விளையாட்டு ஒளிபரப்பு சிக்னல் (தூர்தர்தஷனுடன் கட்டாயமாக பகிர்ந்துகொள்வது) அவசரச் சட்டம் 2007 என பெயரிடப்பட்டுள்ளது. வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு சட்டமாகும்.
இந்த சட்டத்தின்படி உலகின் எந்த மூலையில் இந்தியா விளையாடினாலும் (ஒரு நாள் போட்டிகளில்) அந்தப்போட்டிகளை தூர்தர்ஷனுடன் இணைந்து நேரடியாக இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் நேரடி ஒளிபரப்பு கட்டாயமில்லை. அவற்றின் தொகுப்பை வழங்கினால் போதும்.எந்த்த தனியார் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தாலும் இந்த சட்டம் பொருந்தும்.தூர்தர்ஷனுக்கு நேரடி ஒளிபரப்புக்கான உரிமையை அந்த நிறுவனம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கி>க்கெட் ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருவாயில், 75 சதவீதத்தை தனியார் தொலைக்காட்சிகள் எடுத்துக்கொள்ளலாம், 25 சதவீதத்தை தூர்தர்ஷன் வைத்துக் கொள்ளும் (அந்த விளம்பரங்களை தூர்தசனும்ஒளிரப்புவதால்).
இந்த சட்டத்தின் மூலம், கேபிள் டிவி வசதி இல்லாதவர்களும் கூட உலகின் எந்த மூலையில் இந்தியாவிளையாடினாலும் அந்தப் போட்டியை பார்த்து ரசிக்க முடியும். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பி.ஆர். தாஸ் முன்ஷி தெரிவித்தார்.
வருகிற 8ம் தேதி இந்தியா- இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்தஅவசரச் சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் இந்த அதிரடி முடிவு கிரிக்கெட் ரசிர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம்,பண அறுவடை செய்யும் தனியார் நிறுவனங்களும், விளையாட்டு சேனல்கள் கலங்கிப் போயுள்ளன.












Click it and Unblock the Notifications