சென்னை விமான நிலைய திருட்டு கும்பல் கைது!
சென்னை:வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளின் பெட்டிகளை உடைத்து, அவற்றில் உள்ள நகை, மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களைகொள்ளையடித்த 7 பேரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஒப்பந்த ஊழியர்கள் ஆவர். கூட்டாக சேர்ந்து கடந்த பல ஆண்டுகளாக பயணிகளின்பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளனர்
கடந்த மாதம் 19ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வம், தாம்பரத்தைச் சேர்ந்த பாலு மற்றும் குரோம் பேட்டையைச் சேர்ந்தஏழுமலை ஆகியோரின் பெட்டிகள் உடைக்கப் பட்டு, நகை மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து விமான நிலைய போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.
இதில், விமான நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும், துபாய் மற்றும் லண்டன் விமானங்களில் கடந்த சில ஆண்டுகளாகவேஇதுபோன்ற திருட்டுகள் நடப்பதும் தெரிய வந்தது.
போலீசாரிடம் கர்நாடகா கமர்சியல் மற்றும் இன்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த விஜய்கணேஷ் மற்றும் வெங்கடேசன்,ஐயப்பன், காமராஜ், முத்துராஜ், ஞானகுமார் மற்றும் சாலமன் ஆகிய ஊழியர்கள் சிக்கினர்.
இவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள லேப்-டாப், வீடியோ கேமராக்கள், செல்போன்கள், கேமராக்கள், வாட்சுகள் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இந்த 7 பேரையும் போலீசார் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கடந்த சில ஆண்டுகளாகவே துபாய் மற்றும் லண்டன் பயணிகளின் பொருட்கள் கொள்ளை போயுள்ளன. இது குறித்து வெளியே தெரிந்தால் தங்கள் நிறுவனத்தின்பெயர் கெட்டுவிடும் என்று கருதிய விமான நிறுவனங்கள் பயணிகளை சமாதானப்படுத்தி, ஒரு சிறிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து சரிக்கட்டி வந்தன.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துள்ள திருட்டுகள் குறித்து விசாரணை நடத்த பரங்கிமலை உதவி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில்கடந்த 2004, 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் பயணிகளின் புகார்கள் சம்பந்தமான விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின் போது மூடி மறைக்கப்பட்ட புகார்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications