உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது திமுக கடும் தாக்கு
சென்னை:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அரசை விட உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர்ந்தவர்கள் அல்ல. நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்துக்களாக மாறி விடக் கூடாது என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் .ரண்பாடான தீர்ப்பை வழங்கியது. இரு நீதிபதிகள்அடங்கிய பெஞ்ச்சில் ஈடுபட்டிருந்த நீதிபதிகளில் ஒருவரான இப்ராகிம் கலிபுல்லா, 99 வார்டுகளில் நடந்த தேர்தல் செல்லாது, மறு தேர்தல் நடத்தவேண்டும் என உத்தரவிட்டார்.
அத்தோடு தேர்தல் ஆணையர் சந்திரசேகரனையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். 99 வார்டுகளில் ஒரு வார்டைத் தவிர மற்ற 98வார்டுகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி 98 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து ஏற்கனவேகாலியாக உள்ள 2 வார்டுகளையும் சேர்த்து 100 வார்டுகளுக்கும் 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை திமுக நேரடியாக விமர்சித்துள்ளது. இதை முதல்வரும், திமுக தலைவருமானகருணாநிதியும் பூணைக்கு மணி கட்டப்பட்டுள்ளது என்று ஆமோதித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில், முதல்வர் அலுவலக தபேதார் ஏழுமலையின் மகள் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுகபொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமிதான் இந்த மணியைக் கட்டினார்.
ஆற்காடு வீராசாமியின் அணல் பேச்சு:
இந்தியாவில் அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தலைவர், ஜனநாயகத்தை மதிக்கக் கூடிய தலைவர் நம் தலைவர். ஆனால், ஜனநாயக முறையில்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விட தங்களுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்பதைப் போல தமிழ்நாட்டில் சில நீதிமன்றங்கள்நடந்து கொள்கின்றன.
பொதுவாக நீதிபதிகளைப் பற்றி, நீதிமன்றங்களைப் பற்றி குற்றம் சாட்டக் கூடாது என்பார்கள். ஆனால் நீதிபதிகளின் தீர்ப்புகளை யார்வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வழக்கில், தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உண்டா என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர்.நீதிபதிகள் தங்களது எல்லைக்குள் இருந்து செயலாற்ற வேண்டும். ஒரு முதல்வரிடமோ அல்லது அரசிடமிருந்தோ விளக்கம் கேட்க அவர்களுக்குஉரிமை இல்லை. இன்று தமிழகத்தில் என்ன நடக்கிறது?
சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடந்தது. ஒரு புகார் கூட தேர்தல் ஆணையர் மீதோ அல்லது அரசுமீதோ வரவில்லை. சென்னை தேர்தலிலும் சில குறைகளைக் கூறினார்கள்.
எங்கெங்கே குறை இருப்பதாக சொல்லப்பட்டதோ அங்கு, 27 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்துங்கள் என்று நீதிமன்றம் கூறியது,அதன்படி மறு தேர்தலும் நடத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
அந்த வழக்கில், ஒரு நீதிபதி, இந்த வழக்கைப் பொருத்தவரை தேர்தல் முடிந்து விட்டது. எனவே தனித் தனிாயக வழக்கு தொடுத்து நிவாரணம்தேட முடியுமே தவிர மொத்தமாக தேர்தல் குறித்து வழக்கு தொடர .டியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்கிறார்.
இப்ராகிம் கலிபுல்லா என்ற நீதிபதி 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். 2வது தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிபத்திரிக்கைச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பதாக கூறியுள்ளார். ஒவ்வொரு வார்டிலும் என்ன தவறு நடந்தது என்பதை அவர்விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
அண்ணா நகரில் 11 வார்டுகளில் கலவரம் நடந்ததாக அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால் ஒரு கலவர.ம் நடக்கவில்லை, யாரும் புகார்கொடுக்கவில்லை. ஆனாலும் மறு தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளார். என்ன என்று கேட்டால், பத்திரிக்கைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டுதீர்ப்பளிப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் பத்திரிக்கைச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம்தீர்ப்பு அளித்துள்ளது, ஒரு முறை இருமுறை அல்ல 21 முறை.
சுப்ஙும் கோர்ட்டை மதிக்காமல், ஏதோ ஒரு காரணத்திற்காக, என்ன காரணமோ தெரியவில்லை, 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்என்று இப்ராகம் கலிபுல்லா கூறியுள்ளார்.
3வது நீதிபதி வந்து, விசாரித்து இறுதித் தீர்ப்பை சொல்லும் வரை காத்திருக்கலாம் என்ற நிலை இருந்தபோதிலும், அதுவரை காத்திருக்காமல் 99பேரையும் ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார் முதல்வர் கருணாநிதி. இப்படிப்பட்ட துணிச்சல் நம் தலைவருக்கு மட்டும்தான் வரும்.
மறு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையம் தேதியைச் சொல்லிய பிறகும், அதிமுகவினர் வழக்குதொடருகின்றனர். தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் என்று கோருகிறார்கள்.
இந்த வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையரை மாற்ற நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை, தேர்தலை தள்ளி வைக்க அதிகாரம்இல்லை என்றார். பின்னர் அரசு வக்கீல் ராஜா கலிபுல்லாவைப் பார்த்து, பார்வையாளரை நியமிக்கலாமா என்பது குறித்து அரசின் கருத்தைக்கேளுங்கள் என்கிறார்.
நான் என்ன சொல்கிறேன், சட்டம் என்ன சொல்கிறதோ, அந்த சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதன்படிதான் நீதிபதி நடக்க வேண்டுமே தவிர,நீதிபதியே எனக்கு இந்த தேர்தலை நடத்த விடாமல் தடுக்க அதிகாரம் இல்லை என்று சொல்லி விட்ட பிறகு, ஆணையரை மாற்ற அதிகாரம்இல்லை என்று சொல்லி விட்ட பிறகு, அரசிடம் என்ன யோசனை கேட்பது? சமரச உடன்பாடு என்ன காண்பது?
எனக்குள்ள கவலையெல்லாம் நீதிமன்றங்கள் கட்டப் பஞ்சாயத்துக்கள் போல ஆகி விடக் கூடாது என்பதுதான். தமிழகத்தில் இதேபோலதொடர்ந்து நீதித்துறை நடந்தால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அறவே இல்லாமல் போய் விடும்.
நீதிபதிகள் எல்லாம் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.நீதிபதிகளுக்கு எல்லை உண்டு. அந்த எல்லையோடு அவர்கள் நின்று கொள்ள வேண்டும். அதைத் தாண்டி வரக் கூடாது, தமிழ்நாட்டை ஆளநினைக்கக் கூடாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரையே விமர்சிப்பதற்கு, அரசைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சிப்பதற்கு, யோசனை கேட்பதற்கு சட்டப்படிஅவர்களுக்கு அதிகாரம் இல்லை.
இதேபோல ஓமலூர் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து தமிழக அரசு அறிவித்த நீதிக் கமிஷன் குறித்தும் அதே நீதிபதி ஆட்சேபித்துள்ளார்.நீதிபதிகளைக் கேட்காமல் எப்படி கமிஷன் போடலாம் என்கிறார். முதல்வரின் அதிகாரங்களை எல்லாம் நீதிபதிகளே எடுத்துக் கொள்ள யார்அதிகாரம் கொடுத்தது?. முதல்வருக்கு இல்லாத பொறுப்பு உயர்நீதிமன்றத்துக்கு உள்ளதா?
.தல்வருக்குரிய அதிகாரத்தை அவர் பயன்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றம் சட்டப்படி தனக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அதன்படிதீர்ப்புகளை வழங்க வேண்டும். மற்றபடி தமிழகத்தை ஆள நினைத்தால் அது சரியல்ல என்றார் ஆற்காடு வீராசாமி.
நீதிபதிகளை நேரடியாக விமர்சித்து ஆற்காடு வீராசாமி பேசியதை பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி ஆமோதிப்பது போல பேசினார். அவர்கூறுகையில், பூணைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதைத்தான் இன்று வீராசாமி செய்துள்ளார்.
இதற்குப் பிறகாவது நீதித்துறை தனது கடமையை நேர்மையாகவும், நியாயமாகவும் செய்யும் என்று நம்புவோம்.
தி.க அரசை எதிர்ப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதரவு இந்த அரசுக்கு .ழுமையாக உள்ளது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத்தமிழர்களின் ஆதரவும் இந்த அரசுக்கு உள்ளதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஆற்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பதும், அதை ஆமோதிப்பது போல முதல்வர் கருணாநிதிபேசியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications