திருச்செந்தூர்-ராஜபக்ஷே மைத்துனி தங்க கவசம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சுப்பிரமணியர் பாதம்,வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மைத்துனியும், எம்.பியுமான நிரூபமாராஜபக்ஷே அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

ராஜபக்ஷேவின் மனைவியின் சகோதரி நிரூபமா ராஜபக்ஷே தனது கணவர் மற்றும் குடும்பத்துடன்திருச்செந்தூர் வந்தார் நிரூபமா.

உலக நன்மைக்காகவும், இலங்கை-இந்திய நல்லுறவுக்காகவும் அங்குள்ள பஜனை மடத்தில் வெள்ளியன்றுயாகம் துவக்கினர். நேற்று மூன்றாவது நாளாக யாகம் நடந்தது.

திருச்செந்தூர் முருகனுக்கு பள்ளியறை பூஜையின் போது பயன்படுத்த தங்கத் தாள் பூசப்பட்ட சுப்பிரமணியர்பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குவதாக இவர்கள் வேண்டியிருந்தனர்.

அதன்படி ரூ.8 லட்சம் செலவில் செம்பின்மேல் 108 பவுன் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டையும்கோவிலுக்கு வழங்கினர். இதற்கான நிகழ்ச்சி, நேற்று அதிகாலை 3 மணிக்கு மடத்தில் பூஜை, ஹோமத்துடன்தொடங்கியது.

காலை 8.15 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட சடாச்சரஎந்திரத்திற்கு (முருகனின் திருநாமம் பொறிக்கப்பட்ட தகடு) 53 கும்ப கலசங்களின் புனித நீரால் அபிஷேகம்நடந்தது.

சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றுடன் ஊர்வலம் தூண்டுகை விநாயகர் கோவிலில்துவங்கியது. நிரூபமா ராஜபக்சே, அவரது கணவர் திருக்குமார் நடேசன், உறவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் சண்முகர் சன்னதியில் சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மாள்உருவத்திற்கு புனித கும்ப நீர்அபிஷேகம் நடந்தது.

பின்னர் அவை உள்துறை கண்காணிப்பாளர் திருமலைக்குமாரசாமியிடம் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்ச்சியில்இலங்கை எம்.பி. குடும்பத்தினர், கோவில் விதாயகர்த்தா ராமானந்த சாஸ்திரிகள், ஏராளமான அர்ச்சகர்கள்கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+