கேரளாவில் கோவை ரயில்கள் மறிப்பு!
பாலக்காடு:சேலம் ரயில்வே கோட்டத்தை எதிர்த்து பாலக்காட்டில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் கோவைவழியாக செல்லும் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ரயில்வே கோட்டத்தைப் பிரித்து, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் உள்ளபகுதிகளை இணைத்து புதிய ரயில்வே கோட்டத்தை, சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி இதற்கான கால்கோள் விழா சேலத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் தேவையில்லாமல் சேலம்கோட்டத்திற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகப் பகுதிகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளகேரளா பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாலக்காட்டில் நேற்று ரயில் மறியல்போராட்டத்தில் குதித்தனர். பாலக்காடு அருகே உள்ள ஒலவக்காடு ரயில் நிலையத்தில் இந்தப் போராட்டம்நடந்தது. கேரளாவிலிருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களை செல்ல விடாமல் தடுத்து ரகளை செய்தனர்.
500க்கும் மேற்பட்டோர் நடத்திய இந்தப் போராட்டத்தால், சுமார் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
போராட்டம் காரணமாக பாலக்காடு-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ், மங்களாபுரம்-சென்னை ரயில்,பாலக்காடு-கொச்சி பாசஞ்சர் ஆகியவை நிறுத்தப்பட்டன.
ரயில்வே போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்ககளை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications