எல்ஜி-செஞ்சி: காயடிக்கப்பட்ட காளைகள்!
திருப்பூர்:காயடிக்கப்பட்ட இரு காளை மாடுகளை அதிக விலை கொடுத்து வாங்கி விட்டார் கருணாநிதி என்று எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் குறித்துமதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திருப்பூரில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மதிமுகவை சிதைக்க, காயடிக்கப்பட்டஇரு காளைகளை அதிக விலை கொடுத்து வாங்கி விட்டார் கருணாநிதி.
மதிமுகவை கொத்திக் கொண்டு போவது அவரின் முயற்சியாகும். ஆனால் ஒரு கருணாநிதி அல்ல, 100 கருணாநிதி வந்தாலும், மதிமுக என்றகோட்டையிலிருந்து ஒரு கல்லைக் கூட எடுக்க முடியாது.
கட்சிகளை உடைப்பது கருணாநிதிக்குப் பழக்கப்பட்ட ஒன்று. பல கட்சிகளை உடைத்து வெற்றி பெற்ற கருணாநிதி, மதிமுகவை உடைப்பதில்எனது தலைவர் வைகோவிடம் தோற்றுப் போய் விட்டார்.
பெரியாருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என்று என்றாவது அவர் கேட்டதுண்டா.? லால் பகதூர் சாஸ்திரி, சந்திரசேகர், வி.பி.சிங்ஆகியோருக்குக் கூட நாடாளுமன்றத்தில் சிலை இல்லை.
ஆனால் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி விட்டு, காதல் கடிதத்தை கொளுத்தினேன் என்று கூறியவருக்கு (மாறன்) நாடாளுமன்றதில் சிலையா?இதைக் கேட்டதற்குத்தான் கட்சியை உடைக்க முற்பட்டார் கருணாநிதி.
வைகோவுக்கு செல்வாக்கு போய் விட்டது என்று செஞ்சி சொல்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விட்டால் கட்சியை கலைத்து விடவேண்டுமா? நடந்தது தேர்தலா?
கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் நிர்வாகி தாக்கப்பட்டார். ஒரு காவல்துறை உயர் அதிகாரி ஓட்டு போட முடியாமல் திரும்பினார். அது தேர்தலேஅல்ல, ஜனநாயகப் படுகொலை.
திமுக கூட்டணியில் இருந்திருந்தால், 15 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருப்போம். ஆனால் 15 பேருக்கும் அமைச்சர் பதவியைக் கொடுத்து விட்டு,மதிமுக எங்கள் தலைமை இல்லை என்று அவர்களிடம் கருணாநிதி எழுதி வாங்கியிருப்பார்.
எம்.எல்.ஏக்களையும் விலை பேசினார்கள். ஆனால் முடியவில்லை. எல்.ஜியையும், செஞ்சியையும் கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் திமுகவில்சேர்ந்து இருவரும் பதவி பெற்றிருப்பார்கள். ஆனால் இருவரையும் கட்சியிலிருந்து நீக்காததால், அங்கு போய் சேர முடியவில்லை, அங்கும்இங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சாகும் வரை அவர்களை மதிமுகவிலிருந்து நீக்க மாட்டோம். இப்போதுதான் எனக்குத் தெரிந்து வைகோ அரசியல் தந்திரியாக நல்லமுடிவெடுத்துள்ளார்.
6 படங்களில் வெற்றி பெற்ற ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.அதேபோல 6 எம்.எல்.ஏக்களைப் பெற்ற நாங்கள் ஒரு நாள் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்றார் சம்பத்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications