அதிமுகவுக்கு திருநாவுக்கரசர் அட்வைஸ்
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பது தவறான முடிவு என்று பாஜக தேசியசெயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை திருநாவுக்கரசர் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது.நீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் இப்போது சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடக்கிறது. இதை அதிமுகபுறக்கணித்திருக்கக் கூடாது. போட்டியிட்டிருக்க வேண்டும். தேர்தலை புறக்கணிப்பது பொறுப்பான எதிர்க்கட்சிக்கு அழகல்ல.
தேர்தல் ஆணையமும் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த முன்வர வேண்டும். கடந்த முறைபோல இந்த முறை அசம்பாவிதம், வன்முறை, முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையமும்,காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தற்போதைய திமுக ஆட்சியிலும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரைஊழல் பெருகி விட்டது. இதை நான் வெறுமனே சொல்லவில்லை. என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனதுபுகாரை திமுக மறுத்தால் நான் ஆதாரங்கைள வெளியிடுவேன்.
தமிழகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் எந்தப் பிரச்சினைக்காகவும் 39 எம்.பிக்களும் கட்சிபாகுபாட்டை மறந்து கூட்டாக போய் பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ சந்தித்ததில்லை. இந்த நிலைமாற வேண்டும். இதனால் தமிழக நலன்தான் பாதிக்கப்படுகிறது.
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் வேலையைத் தொடங்கி விட்டதாக செய்திகள் வருகின்றன. ஆனால்இதை திமுக அரசு மறுக்கிறது. உண்மையில் என்னதான் அங்கே நடக்கிறது என்பதை அறிய அனைத்துக் கட்சிக்குழுவை அனுப்பி ஆய்வு நடத்தி உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
நீதிபதிகளையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் விமர்சிப்பது தவறு. இதுதொடர்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமிதெரிவித்த கருத்தை தவறு என்றும் சொல்ல மாட்டேன், சரி என்றும் சொல்ல மாட்டேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுவதைப்போல குற்றவாளிகளை என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்வது தவறு. எந்த குற்றம் செய்திருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தித்தான் தண்டிக்கவேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications