மேட்டூர் நீர்மட்டம் மடமடவென குறைவு!
மேட்டூர்:மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம 84.060 அடியாக இருந்தது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும். அணைக்குவிநாடிக்கு 274 கன அடி நீர்தான் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 2000 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.
தஞ்சையில் உள்ள பெரிய அணைக்கட்டிலிருந்து 1,135 கன அடி நீர் வெண்ணாற்றிலும், பெரிய அணைக்கட்டு கால்வாய்க்கு 100 கன அடி நீரும்விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றிலும் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு சாதகமில்லாத தீர்ப்பு நடுவர் மன்றத்திலிருந்து வெளி வந்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்துவருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications