சூதாட்ட சர்ச்சையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
நாக்பூர்:மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் மர்லான் சாமுவேல்ஸ், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி சமீபத்தில் இந்தியா வந்திருந்தது. இரு அணிகளும் 4 ஒரு நாள் போட்டிகளில் மோதின. இதில் 3 போட்டிகளில்இந்தியாவும், ஒரு போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் வென்றன.
இந்த நிலையில் நாக்பூரில் நடந்த போட்டியின்போது தாதா தாவூத் இப்ராகிமுக்கு நெருக்கமான கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரிடம், தனது அணிகுறித்த முக்கியத் தகவல்களை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் சாமுவேல்ஸ் கொடுத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
நாக்பூரில் ஜனவரி 21ம் தேதி நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா 338 ரன்களை சேர்த்தது. இப்போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிதோல்வி அடைந்தது.
இதுகுறித்து நாக்பூர் காவல்துறை துணை ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளில் ஒருவரான முகேஷ் கோச்சார்என்பவர், சாமுவேல்ஸுடன் தொலைபேசியில் பேசிய பேச்சுக்களை ஒட்டுக் கேட்டபோது சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது அணியின் பேட்டிங் வரிசை குறித்தும், பந்துவீச்சாளர்கள் குறித்தும் பல தகவல்களை கோச்சாருக்கு சாமுவேல்ஸ் கொடுத்துள்ளார். கோச்சார்ஒரு கிரிக்கெட் புக்கி ஆவார்.
ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டிய தகவல்களை சாமுவேல்ஸ் வெளியில் சொல்லியுள்ளார். இதை சூதாட்டம் என்ற கூற முடியாவிட்டாலும் கூட,கிரிக்கெட் சூதாட்ட புக்கியிடம் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இதில் பணம் ஏதும் கைமாறியதா, அப்படியானால் எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. அதுகுறித்துவிசாரித்து வருகிறோம்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் சஷாங் மனோகருக்கு தெரிவித்துள்ளோம். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்ஊழல் தடுப்புப் பிரிவுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.
கோச்சாருடன் சாமுவேல்ஸ் பலமுறை பேசியுள்ளார். எத்தனை முறை பேசினர் என்பதை இப்போது வெளிப்படுத் முடியாது என்றார் அமிதேஷ் குமார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சாமுவேல்ஸ் குறித்த இந்த சூதாட்ட சர்ச்சை பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications