முன்னாள் டிஜிபி பொன் பரமகுரு மரணம்
சென்னை:முன்னாள் டிஜிபியும், இலக்கியவாதியுமான பொன் பரமகுரு சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 83.
தமிழக டிஜிபியாக இருந்தவர் பொன். பரமகுரு. ஓய்வுக்குப் பின்னர் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலைதிருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
மறைந்த பொன் பரமகுரு நெல்லை மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு கமலா என்ற மனைவியும், 2மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
1948ம் ஆண்டு காவல்துறைப் பணியில் சேர்ந்தவர் பொன். பரமகுரு. தமிழகம் தவிர புதுவை ஐஜியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2 முறைகுடியரசுத் தலைவருக்கான பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
காவல்துறை அதிகாரியாக மட்டும் விளங்காமல் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இலக்கிய மாமணி என்ற பட்டத்தையும் பெற்றவர். 50க்கும்மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பவுர்னமி அலைகள் என்ற படத்தில் நீதிபதியாக நடித்துள்ளார்.
காவல்துறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications