பந்த், பேரணி: கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்
பெங்களூரூ:கர்நாடகத்தில் பந்த், ஊர்வலங்கள் உள்ளிட்ட போராட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல கன்னட எழுத்தாளர் டாக்டர் மருளசித்தப்பா, பத்திரிக்கையாளர் சூத்ர ஸ்ரீனிவாஸ், ஜன ஸபந்தன சேவா சமஸ்தி ஆகியோர் இது தொடர்பாகபொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பந்த், ஊர்வலங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவோர், அந்தப் போராட்டங்களின்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்குசேதம் ஏற்பட்டால், அவர்கள் அதற்குரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும் பொது அமைதி மற்றும் மத ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.இதற்காக விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
ஜனவரி 22ம் தேதி பெங்களூரில் நடந்த வகுப்பு மோதலின்போது உயிரிழந்த 12 வயது சிறுவனின் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவில் கர்நாடகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தையும் அவர்கள் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பி.எஸ்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறிஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து வருகிற 12ம் தேதி பல்வேறு கன்னட அமைப்புகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழுஅடைப்பின்போது வன்முறை வெடிக்கக் கூடும் என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் இந்த பொது நலன் மனுமுக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications