காவிரி தீர்ப்பை எதிர்த்து தமிழகமும் அப்பீல்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என முதல்வர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, நீண்ட காலத்திற்குப் பிறகு ஆறுதல் தரும் தீர்ப்புவெளியாகியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் நடுவர் மன்றத் தீர்ப்பு நியாயமற்றது, இதை எதிர்த்து உடனடியாக மறு ஆய்வு மனுவைத் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனஅதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஒரு சில கட்சிகளே நடுவர் மன்றத் தீர்ப்பை வரவேற்றிருந்தன.

இந்த நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நடுவர்மன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்யும் என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது: கர்நாடகத்தைப் போல நமக்கும், இந்தத் தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்யக் கோரும் உரிமைஉள்ளது. அதைப் பயன்படுத்தி நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

ஆரம்பத்தில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி தண்ணீரை விட வேண்டும் என நடுவர் மன்றம் தெரிவித்த தீர்ப்பு கர்நாட மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உண்மை என்னவென்றால், குடகு முதல் தமிழகத்தில் உள்ள கீழணை வரையிலான மொத்த காவிரி நீரின்அளவைத்தான் நடுவர் மன்றம் அவ்வாறு கூறியுள்ளது.

இந்தத் தண்ணீரைத்தான் ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு பிரித்துக் கொள்ள வேண்டும் என நடுவர் மன்றம் வகுத்துக் கூறியுள்ளது.

நமக்கும், கர்நாடகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நீரின் அளவில் ஏறக்குறைய பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. தமிழகத்திற்கு நேரடியாக வரும்தண்ணீரின் அளவும், கர்நாடகம் நமக்கு ஒதுக்கும் தண்ணீரின் அளவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

ஆனால் இதை கர்நாடகத்தில் உள்ள சிலர் புரிந்து கொள்ளாமல் விவசாயிகளைத் தூண்டி விட்டு பிரச்சினைய பெரிதுபடுத்தி வருகின்றனர்.

நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டங்கள், சாலை மறியல்கள், வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளதுஉள்ளிட்டவற்றை பத்திரிக்கைகள் பெரிதுபடுத்துகின்றன.

மனிதாபிமான கண்ணோட்டத்துடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். கர்நாடகத்தில் நிலைமை தற்போது படிப்படியாக சீராகி வருகிறது.தேவைப்பட்டால், கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் நான் இதுகுறித்துப் பேசுவேன்.

நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையான நேரத்தில் கூட்டப்படும். மக்கள் நலனைப் பாதிக்கும் வகையில்இந்தக் கூட்டம் அமைந்து விடக் கூடாது.

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஆனால் அதற்குரிய நேரம் வர வேண்டும், காலம் வர வேண்டும், பொருத்தமான சமயத்தில் அது நடக்கும்.

தேமுதிக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை. தவறான முறையில் தாக்கல் செய்யப்பட்டதால்தான்அவை நிராகரிக்கப்பட்டன. அந்த வேட்பு மனுக்களைப் பார்த்தாலே அது தெளிவாகத் தெரிய வரும். தனது வேட்பாளர்கள் மீதே அக்கட்சியின்தலைவருக்கு நம்பிக்கை இல்லாததால்தான் எங்கள் மீது புகார் கூறுகிறார்.

மத்திய அமைச்சர் ரகுபதியின் தனிச் செயலாளர் ஷகீல் அகமது அக்தர் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் ஜெயலலிதா. அவரதுகுற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மை இல்லை. உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல், அறிக்கை விட்டுள்ளார். இதில் ரகுபதிக்கு எந்தப்பங்கும் கிடையாது.

உண்மையில், கடந்த 2002ம் ஆண்டு அவர் முதல்வராக இருந்தபோதுதான் இந்த போலீஸ் அதிகாரி, ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டு மத்தியஅரசுப் பணிக்கு அனுப்பப்பட்டார். இப்போது எந்த ஷகீல் அக்தர் மீது ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறாரோ, அவரேதான் 2002ம் ஆண்டு நவம்பர்28ம் தேதி குடியரசுத் தலைவர் பதக்கத்திற்காக சிபாரிசும் செய்தார். ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் ஷகீல் அகமதுவுக்கு குடியரசுத் தலைவர்பதக்கமும் கிடைத்தது. அதை ஜெயலலிதாதான் ஷகீல் அகமதுவுக்கு கொடுத்தார்.

இதுதவிர, 2003ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதே அதிகாரிக்குத்தான் ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகை கொண்டவீரப் பதக்கத்தையும் வழங்கினார். அது மட்டுமா? 2004ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ரூ. 1.75 லட்சம் பரிசுத் தொகை கொண்ட விருதையும்ஜெயலலிதாவேதான் ஷகீல் அகமதுவுக்கு வழங்கினார்.

ஜெயலலிதாவால் குற்றவாளி என்று சுட்டப்பட்டுள்ள ஷகீல் அகமதுதான், 2002ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பெங்களூரில் இமாம் அலியைசுட்டுக் கொன்றார். அவரது வேண்டுகோளின் பேரில்தான் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு அவர் மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதையாகும். நாட்டின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை எதிரிகளுக்கு கொடுத்ததாகரா அமைப்பு ஷகீல் அமகது மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. தமிழக அரசுக்கு அதுபோல எந்தத் தகவலும் வரவில்லை.

மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் ஷகீல் அமகது காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அவரை தமிழகப் பணிக்கு மீண்டும்மாற்றியதில் எந்தத் தவறும் நடக்கவில்லை. காவல்துறையில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்திஎப்படியாவது முதல்வர் பதவிக்கு வந்து விட வேண்டும் என்பதைத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை காட்டுகிறது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+