12 வயது மாணவி நாசம்: 78 வயது சாமி கைது
சென்னை:12 வயது பள்ளி மாணவியை மயக்க விபூதி கொடுத்து மானபங்கம் செய்ததாக 78 வயது பூசாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் கடந்த 25 வருடங்களாக ராமலிங்கம் (78) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர்பெண்களின் குடும்பப் பிரச்சனைகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து வந்தார்.
இந்த நிலையில், தாதங்குப்பத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கமலா (12) என்ற மாணவி பள்ளிகூடம் செல்லும்போது கோவிலுக்கு வெளியேநின்றபடி சாமி கும்பிட்டார். அப்போது பூசாரி உள்ளே அழைத்திருக்கிறார்.
உள்ளே சென்ற கமலாவின் புத்தக பையை வாங்கி தன் அறைக்குள் வைத்துள்ளார். அப்போது தனக்கு பள்ளிக்கு நேரமாகி விட்டது, பையை திருப்பிகொடுங்கள் என்று கமலா கேட்டுள்ளார். அதற்கு அந்த பூசாரி, உள்ளே வந்து எடுத்துக்கொள் என்று கூறியதால், கமலா உள்ளே சென்றார்.
அப்போது சாமியார் அறைக் கதவை தாழ்ப்பாள் போட்டார். உனக்கு தோஷம் இருக்கிறது, அதனால் உன் பெற்றோருக்கு ஆபத்து என கூறிசிறுமியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கியுள்ளார். பின்னர் மயக்கப்பொடி கலந்த விபூதியை நுகர செய்துள்ளார்.
இதையடுத்து கமலா மயங்கி விட்டார். அதன் பின்னர் அந்தச் சிறுமியை காம வெறி பிடித்த பூசாரி, மானபங்கப்படுத்தியுள்ளார். மயக்கம் தெளிந்துமாலை 4 மணிக்குத்தான் அந்த மாணவி எழுந்துள்ளார்.
அவரிடம், இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால் மந்திரத்தால் கொன்று விடுவேன் என பூசாரி மிரட்டி அனுப்பியிருக்கிறார். தப்பித்தால்போதும் என ஓடி வந்த கமலா தன் தாய் லதாவிடம் நடந்த விவரங்களை கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த கமலாவின் தாய் போலீஸில் புகார்கொடுத்தார்.
வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சேகர் பூசாரியைக் கைது செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications