தமிழகத்துக்கு உலக வங்கி ரூ2547 கோடி கடன்!
டெல்லி:தமிழக நீர்ப்பாசன கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்காக உலக வங்கி ரூ. 2,547 கோடி கடன் உதவியை வழங்குகிறது. இதுதொடர்பானஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நிதித்துறை இணைசெயலாளர் மதுசூதனன் , தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் ராஜரத்தினம் மற்றும் உலக வங்கியின் தெற்கு ஆசிய துணை தலைவர் பிரபுல்படேல் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகம் முழுவதும் 63 துணை நதி படுகைகளில் உள்ள 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், பாசனத் திட்டங்களை நவீன மயமாக்க இந்த நிதிபயன்படுத்தப்படும்.
இதன் மூலம் விவசாயம், தோட்டக்கலை, மீன் வளத்துறை மற்றும் ஆராய்ச்சி போன்றவைகளும் ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் 62 லட்சம் மக்கள்ஆற்று படுகைகளில் வாழ்கிறார்கள்.
ரூ. 2,547 கோடி கடன் தொகையில், நீர் வளத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் ரூ. 1,500 கோடியும்,
63 துணைப் படுகைகளில் தொழில் நுட்பத்தை அறி.கப்படுத்துதல் மற்றும் கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிக்காக ரூ. 250 கோடியும்,
மகசூலை பெருக்க உதவும் தரமான புதிய விதைகளுக்காக ரூ. 190 கோடியும், தோட்டக் கலைக்காக ரூ. 75 கோடியும், விவசாய கிடங்குகள் அமைக்கரூ. 25 கோடியும், சொட்டு நீர் பாசனத்திற்காக ரூ. 350 கோடியும் மற்றும் மீன் வளர்ச்சிக்காக ரூ. 60 கோடியும் ஒதுக்கப்படும்.
நிகழ்ச்சியில், ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் நதி நீர்தான் விவசாயத்தின் முதுகெலும்பாக இருக்கிறது என்றார்.
பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகவங்கியின் உதவியுடன் தமிழகத்தில் நீர் நில சீரமைப்பு, புணரமைப்பு பணிகள் செய்யப்படும். இதனால் மூலம் நீர்பாசனம் அபிவிருத்தி அடைவதுடன்மக்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications