பெங்களூரில் கன்னட நடிகர், நடிகையர் பேரணி-அம்பரீஷ், சரோஜா தேவி மிஸ்ஸிங்
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் கன்னட நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரையுலகினர் இன்று பேரணி நடத்தினர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கன்னடத் திரையுலகினர் இன்று பிரமாண்டப் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.இன்று காலை மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடிகர், நடிகையர் திரண்டனர். பின்னர் நடிகர் விஷ்ணுவர்த்தன் தலைமையில்பேரணி தொடங்கியது.
மறைந்த ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனீத் குமார், ரமேஷ் அரவிந்த், தர்ஷன், நடிகைகள் ஜெயமாலா,ஜெயந்தி, தாரா, ரக்ஷிதா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்திற்குத் தலைமை தாங்குவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நடிகை சரோஜா தேவி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வரவில்லை என்றுதெரிவிக்கப்பட்டது.
அதே போல இந்தப் பேரணியில் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் கலந்து கொள்ளவில்லை. மாண்டியா மாவட்ட விவசாயிகளின்பிரதிநிதியே நான் தான் என்று மார்தட்டி வரும் அம்பரீஷ் அதில் ஆப்சென்ட் ஆனது புருவங்களை உயரச் செய்துள்ளது.
ஊர்வலம் பின்னர் ஆளுநர் மாளிகையுடன் முடிவடைந்தது. இதையடுத்து விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட சில பிரதிநிதிகள் ஆளுநர்டி.என்.சதுர்வேதியை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் விஷ்ணுவர்த்தன் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு கர்நாடகத்திற்கு ஏற்புடையது அல்ல, அநீதியான தீர்ப்பு.இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
நடிகர், நடிகையரின் பேரணியையொட்டி ஊர்வலம் செல்லும் பாதை நெடுகிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புகொடுத்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications