துரைமுருகனிடம் சட்டம்-வேலுவிடம் கூட்டுறவு:கோ.சி மணி முக்கியத்துவம் குறைப்பு
சென்னை:திமுக அமைச்சரவையில் உள்ள ஐந்து அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோருக்கு கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கோ.சி.மணி வகித்து வந்த கூட்டுறவுத் துறை அ.வ.வேலுவிடம் தரப்பட்டுள்ளது. பொன்முடியிடம் இருந்த முன்னாள் ராணுவத்தினர் நலன் மணியிடம்தரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த புள்ளியியல் துறையும் மணியிடமே இருக்கும்.
கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக முக்கிய பொறுப்பில் இருந்த மணிக்கு இந்த முறை கூட்டுறவுத் துறை தான் வழங்கப்பட்டது.இப்போது அதுவும் பறிக்கப்பட்டு உப்பு சப்பில்லாத துறைகளான முன்னாள் ராணுவத்தினர் நலன், புள்ளியியல் துறை ஆகியவை தரப்பட்டுள்ளன.இதன் மூலம் கோ.சி. மணியின் முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த அ.வ.வேலுவிடம் கூட்டுறவுத் துறையும் சேர்த்து கொடுக்கப்பட்டு அவரது முக்கியத்துவம்அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனிடம் கூடுதலாக சட்டத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தத் துறைஐ.பெரியசாமியிடம் இருந்தது. இனிமேல் ஐ.பெரியசாமி வருவாய் மற்றும் சிறைத் துறைகளை மட்டும் கவனிப்பார்.
உயர் கல்வி அமைச்சராக உள்ள பொன்முடியிடம், முதல்வரிடமிருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை வழங்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications