ஜெ. பங்களா அருகே புதிய விமான நிலையம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் பையனூர் பங்களா அருகே புதிய விமான நிலையத்தைநிர்மாணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெ>கிறது.

சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் அங்கு இட நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து விமானநிலையத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக விமான நிலையத்தின் பின்புறம் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 1,000 ஏக்கர் அளவுக்குஇடம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகளை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்த மக்களிடையே கடும்எதிர்ப்பு கிளம்பியது. இதை வலியுறுத்தி விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள்பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து மக்கள் வசிக்கும் பகுதிகள் கையகப்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. சட்டசபையிலும் இதுகுறித்துமுதல்வர் கருணாநிதி உறுதியளித்தார்.

இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையம் அமைக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ளவிமான நிலையத்தை விட்டு விட்டு புதிதாக விமான நிலையத்தை அமைக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விரும்பவில்லை.

இந் நிலையில், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள புதிய விமான நிலையம் அமைக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தசாலையில் சில இடங்களை விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனர்.

பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போ>லிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில், கருங்குழி பள்ளம் என்ற இடம் உள்ளது. இங்குதான்முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்குச் சொந்தமான பங்களா ஒன்று உள்ளது.

இந்த இடத்திலிருந்து பையனூர் வரை (இங்குதான் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் ஆடம்பர பங்களா உள்ளது) பக்கிங்காம் கால்வாயை ஒட்டி 4கிலோமீட்டர் நீளம், ஒன்றரை கிலோமீட்டர் அகலம் கொண்ட காலி இடம் உள்ளது.

இதில் 90 சதவீத இடம் த>சு நிலமாகும். ,3000 ஏக்கர் நிலம் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவம் அதைப் பயன்படுத்தாமல்உள்ளதால், தனியார் பலர் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த இடம், கடந்த அதிமுக ஆட்சியின் போது நிர்வாக நகரம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் என்பது நினைவிருக்கலாம்.

இந்திய விமான நிலைய குழும தலைவர் ராமலிங்கம் இந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தமிழக அரசின் வருவாய்த்துறைஅதிகாரிகளும் உடன் சென்றனர்.

புதிய விமான நிலையம் இப்பகுதியில் வரலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதால் தற்போது சிறுசேரி வரை போடப்படவுள்ள ஆறு வழிஐ.டி.காரிடார் சாலை, பூஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளது.இருப்பினும் இதனால் விமான நிலையம் அமைக்க எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த இடம் சரிப்பட்டு வராவிட்டால், மேலும் இரு இடங்களையும் தமிழக அரசு ப>ந்துரைத்துள்ளது. அதன்படி, கேளம்பாக்கம் - வண்டலூர்சாலையில் புதுப்பாக்கம், மாம்பாக்கம் இடையே உள்ள 1,500 ஏக்கர் நிலப்பகுதி. இந்த இடத்தில்தான் முன்பு துணை நகரம் அமைக்க தமிழக அரசுதிட்டமிட்டது. ஆனால் பாமகவின் கடும் எதிர்ப்பால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இன்னொரு இடம், கேளம்பாக்கத்திலிருந்து திருப்போரூர் வரையில் உள்ள உப்பளம் என்ற இடம். இந்தப் பகுதியில் 700 ஏக்கர் நிலம் அரசுக்குச்சொந்தமானது. ஆனால் தனியாருக்கு இப்போது குத்தகையாக வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+