ஆற்காடுக்கு எதிரான மனு-உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை:நீதிபதிகள் குறித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது வருத்தம் தருகிறது, தேவையற்ற பேச்சு என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றதலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், பின்னர் ஆற்காடு வீராசாமி மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டது.
சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நீதித்துறை மற்றும் நீதிபதிகளைப் பற்றி முதல்வர்கருணாநிதி முன்னிலையில் கடுமையாக பேசியிருந்தார்.
இதையடுத்து பதவி ஏற்பின்போது எடுத்துக் கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முரணாக முதல்வர் கருணாநிதியும், ஆற்காடு வீராசாமியும் செயல்பட்டுஇருப்பதால் , இருவரும் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கோரிசென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி என்ற பொது நல சேவகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஷா கூறுகையில்,இதைகோ-வாரண்டோ மனுவாக ஏற்க முடியாது. அனால் அமைச்சர் கூறிய கருத்துக்கு அரசின் நிலை என்ன என்பது குறித்து கோர்ட்டுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
மூத்த அமைச்சர் ஒருவர் முதல்வர் முன்னிலையில் இதுபோல நீதித்துறையை விமர்சித்து இருப்பது வேண்டுமென்றே கூறப்பட்ட கருத்துகளாககருதுகிறோம். நீதித்துறையை களங்கப்படுத்தும் நோக்கத்தில் கூறப்பட்டதற்கு நோட்டீஸ் கொடுக்கலாம்.
விமர்சனம் என்ற பெயரில் தாக்கக் கூடாது. நேர்மையான கருத்துகளை வரவேற்கிறோம். நீதிபதிகள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் எனகேட்டிருக்கிறார். நாங்கள் சாதாரண மனிதர்கள் தான். எங்களிடம் மந்திரகோல் எதுவும் இல்லை.
அமைச்சரின் இந்த பேச்சு வருத்த்ததை அளிக்கிறது. அவர் தொடர்பான 3 வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, இதுபோல கூறியிருப்பது,விசாரணையில் குறுக்கீடாக கருதுகிறோம். அனால் கோர்ட் அவமதிப்பு வழக்கு என்ற ஆயுதத்தை கையில் எடுக்க விரும்பவில்லை.
நாங்கள் கூறும் கருத்துகள் அரசுக்கு எதிராக உள்ளன என்றோ, அரசின் கண்ணியத்தையும் மரியாதையும் குறைக்கும் வகையில் உள்ளன என்றோகருதக்கூடாது. அரசும், நீதித்துறையும் அரசியல் சாசனத்தில் செயல்படும் தனித்தனி அமைப்புகள். இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர்கள் என்று யாரும்இல்லை.
கோர்ட் முடிவுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பது சகஜம். இக் கருத்துகளை கூறுவது மூலம் அரசுக்கு எதிராக எந்த கேள்வியும் கேட்க கூடாதோஎன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அவர் இப்படி பேசியதால் கோர்ட் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும். அவரின் பேச்சுதேவையற்றது.
யார் என்ன சொன்னாலும் நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். இது ஒரு கோவில், 125 வருடங்களாக நடந்து வரும் கோவில். அரசும்நீதித்துறையும் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்வேண்டும் என்றார்.
அப்போது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கூறுகையில், நீதிமன்றத்தை கட்டப் பஞ்சாயத்து என்று ஆற்காடு வீராசாமி கூறவில்லை.அப்படி செயல்படகூடாது என்றுதான் கூறினார். முதல்வரின் கருத்துகளையே தனது நிலையாக எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அவர்தெளிவுபடுத்தியிருக்கிறார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஷா, முதல்வரின் அறிக்கையை பற்றி நாங்கள் பேசவில்லை, அவரது அறிக்கை தான் தனது நிலை என்றுகூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. மனு தள்ளுபடி ஆகும், ஆகாது என்பதெல்லாம் வேறு விஷயம். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விவகாரம்தொடர்பாக அமைச்சர் தனது நிலையை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என ஷா உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆற்காடு வீராசாமி சார்பில் வழக்கறிஞர் ராமன் இன்று விளக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நீதித்துறையைகளங்கப்படுத்தும் வகையிலோ, மதிப்பைக் குறைக்கும் வகையிலோ ஆற்காடு வீராசாமி பேசவில்லை.
நீதித்துறைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் எண்ணமும் அவருக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயன்றபோது, தலைமை நீதிபதி ஷா அதை இடை மறித்து, இத்துடன்இந்தப் பிரச்சினையை விட்டு விடலாம். அமைச்சரின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டர்.
சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையில் நீதித்துறையையும், நீதிபதிகளையும் விமர்சித்த ஆற்காடு வீராசாமியைக் கண்டித்து திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி சட்டக் கல்லூரி முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில் நீதிபதிகளை விமர்சித்த ஆற்காடு வீராசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும். இதுபோல எதிர்காலத்தில் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications