தீவைப்பு, மறியல், முற்றுகையுடன் முடிந்த பந்த்
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி முடிந்தது.இருப்பினும் பல இடங்களில் தீவைப்பு, ரயில் மறியல், விமான நிலைய முற்றுகை ஆகியவை நடந்தன.
முழு அடைப்பையொட்டி பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வசிக்கும்நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் தவிர பாஜகவும் ஆதரவு தெரிவித்தன. அதேசமயம், மாநிலத்தோடு ஒத்துப்போவது என்ற அடிப்படையில், தமிழர் கட்சிகள், அமைப்புகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
பந்த்தின்போது பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட 1600 பேர் கைது செய்யப்பட்டாதக போலீஸார்போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு கன்னட வெறிக் கட்சித் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மறைந்த நடிகர்ராஜ்குமாரின் ரசிகர்களும் அவரது உருவ தட்டியுடன் கலந்து கொண்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
நேற்று மாலை 6 மணியுடன் பந்த் முடிவடைந்தது. அதன் பின்னர் பெங்களூரு, மைசூரூ உள்ளிட்ட பல பகுதிகளிலும் நிலைமை சகஜமானது. கடைகள்திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் பரவலாக தொடங்கியது.
பந்த் குறித்து மாநில டிஜிபி சீனிவாசன் கூறுகையில், பந்த் பொதுவாக அமைதியாக நடந்தது. சிறு சிறு சம்பவங்களைத் தவிர வேறு எங்கும்விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறவில்லை என்றார்.
போராட்டம் தொடருமாம்:
இதற்கிடையே, கர்நாடக மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கன்னட எல்லைப் பாதுகாப்புக் குழு என்ற கன்னட அமைப்புகூறியுள்ளது.
இதுதொடர்பாக நாளை பெங்களூரு நகரில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தப் போகிறதாம் இந்த அமைப்பு. பல்வேறு கன்னட அமைப்புகளையும்தங்களுடன் இணைத்துப் போராடவும் இந்த அமைப்பு முடிவு செய்துள்ளதாம்.
ஸ்தம்பித்த நகரங்கள்:
முழு அடைப்பைத் தொடர்ந்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. அரசு-தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஆகியவை ஓடவில்லை.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
வர்த்தக நிறுவனங்களும், சாப்ட்வேர் நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டன. கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.பெட்ரோல் பங்குககளும் கூட மூடப்பட்டுவிட்டன.
இதனால் பெங்களூரு நகரமே வெறிச்சோடிக் கிடந்தது. சாலைகளில் வாகன நடமாட்டம் இல்லை. அவசிய வேலைகளுக்கு வெளியே செல்பவர்கள்கூட பெரும்பாலும் நடந்தே சென்றனர்.
கன்னட கொடியை கட்டியபடி சில கார்களும் போலீஸ் வாகனங்களும் மட்டுமே சாலைகளில் வலம் வந்தன.
தமிழர்கள் அனைவரும் கலவர பீதியில் வீட்டுக்குள் அடைந்து கிடந்தனனர். பலர் குடும்பங்களோடு முன்னெச்சரிக்கையாக தமிழகத்திற்குள் போய்விட்டனர்.
மிக பலத்த பாதுகாப்பு:
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தப் பகுதிகளில் மாநில போலீசாருடன் மத்தியபாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெங்களூரில் மட்டும் 20,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிவாஜி நகர், ராஜாஜி நகர், வசந்த நகர், சாந்தி நகர்உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டனர்.
தமிழக பஸ்கள் ரத்து:
பந்தையொட்டி தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்குச் செல்லும் வாகனங்கள் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் நிறுத்தப்பட்டன.
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்), கோவிந்தப்பாடி (ஈரோடு) வரை மட்டுமே தமிழக பகுதியிலிருந்து செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
மைசூர் நகரிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இரு நகரங்களிலும் விரைவு அதிரடிப்படையினர், கலவரத் தடுப்பு வாகனங்கள்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கன்னட படப்பிடிப்புகள் ரத்து:
கர்நாடக நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நடக்கும் பந்துக்கு கன்னட திரையுலகினரும் முழு ஆதரவளித்து கன்னட படப்பிடிப்புகள் அனைத்தும்ரத்து செய்யப்பட்டன.
நடிகை சரோஜா தேவி, நடிகரும் எம்பியுமான அம்பரீஷ் ஆகியோர் தலைமையில் இன்று பிரமாண்டப் பேரணி நடத்தப்படவுள்ளது.
ரயில் சிறைபிடிப்பு:
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னட அமைப்பினர் பெங்களூரூ மெஜஸ்டிக் ரயில் நிலையில் சிறை பிடித்தனர்.
நேற்று காலை 5 மணியளவில் வந்த அந்த ரயிலை கன்னட ரத்ன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள் சிறை பிடித்தனர். தண்டவாளத்தில் கும்பலாகஅமர்ந்தோடு, பலர் ரயில் என்ஜினிலும் ஏறினர்.
என்ஜினை ஆப் செய்யுமாறு கூறிய அவர்கள் தமிழகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பும் பீதியும்ஏற்பட்டது.
ரயிலில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களிடையே அச்சம் பரவியது.
அவர்களை ரயில்வே போலீசார் கைது செய்ய முயன்ற போது, சிலர் ரயில் மீது ஏறி மின்சார கம்பியில் கை வைத்து தற்கொலை செய்யப் போவதாகமிரட்டினர். இதையடுத்து போலீசார் அவர்களை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நெடு நேரத்துக்குப் பின் கன்னட அமைப்பினர் 40 பேரை போலீசார் கைது செய்து ரயிலை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.
அதே போல யஷ்வந்த்பூர், சென்னபட்டணா, பெல்லாரியின் ஹோஸ்பேட் ஆகிய ரயில் நிலையங்களிலும் ரயில்களை மறித்து போராட்டங்கள்நடந்தன.
பார்க்கிங் பைக்குகள் எரிப்பு:
அதே போல மைசூர் ரயில் நிலையத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள்களுக்குஒரு கும்பல் தீ வைத்தது. அதில் ஏகப்பட்ட பைக்குகள் எரிந்து சாம்பலாயின.
![]() |
விமான நிலையத்தில் முற்றுகை:
அதே போல பெங்களூரு விமான நிலையமும் போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பவில்லை. விமான நிலையத்துக்குள் அதிகாலையில் புகுந்தகன்னட அமைப்பினரை மத்திய பாதுகாப்புப் படையினர் விரட்டிப் பிடித்தனர்.
அவர்களை பின்னர் மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலையத்தில் இருந்து கார்கள், டாக்சிகளை இயங்க விடாமல் அவ்வப்போது போராட்டம் நடந்ததால் உலகின் பல பகுதிகளில் இருந்தும்பெங்களூரு வந்திறங்கியவர்கள் நகருக்குள் போக முடியாமல் அங்கேயே முடங்கிக் கிடந்தனர்.
இதனால் விமான நிலையம் சந்தைக் கடை போல காணப்பட்டது. பெங்களூருக்கு வர இருந்த 9 விமானங்களை பல்வேறு நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன.
பஸ்சுக்கு தீ வைப்பு:
பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் நேற்று காலை முதல் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில்மூடப்பட்டிருந்த கடைகள் மீது கல்வீச்சும் நடந்தது. மைசூரில் ஒரு பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது
பிபிஓ, கால் சென்டர்களையும் பணி செய்ய விடாமல் கன்னட அமைப்புகள் தடுத்தன.
நேற்று அதிகாலையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெங்களூரு கால் சென்டர்கள் சிலவற்றிற்கு கர்நாடகக் கொடியுடன் (இந்தியாவின் வேறுஎந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கொடி கிடையாது) நுழைந்த கன்னட அமைப்பினர், அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறுமிரட்டியது.
இதனால் அவசர அவசரமாக அங்கிருந்து ஊழியர்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்றனர். ஆனால் ஊழியர்களுக்கான வாகனங்களையும்போராட்டக்காரக்கள் பயன்படுத்த விடவில்லை.
இதையடுத்து அவர்களிடம் அலுவலக நிர்வாகிகளும் ஊழியர்களும் கெஞ்சியதையடுத்து கர்நாடகக் கொடியைக் கட்டியபடி அந்த வாகனங்களைஇயக்க அனுமதித்தனர்.
அதே போல காலையில் கால் சென்டர்களுக்கு வேலைக்கு ஊழியர்களை அழைத்துக் கொண்டு வந்த டாடா இன்டிகா, சுமோ, குவாலிஸ் போன்றவாகனங்களை குறி வைத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் அவற்றின் டயர்களில் இருந்து காற்றை இறக்கிவிட்டனர்.
கையில் தடியோடு வாகனங்களை நிறுத்திய கும்பல்களைப் பார்த்து பல பெண் ஊழியர்கள் பயத்தில் அழுதனர். நடு வழியில் இறக்கிவிடப்பட்டபெண், ஆண் ஊழியர்கள் நடுங்கும் குளிரில், அச்சத்துடன் பல கி.மீ. தூரம் நடந்தபடியே வீடுகளுக்குத் திரும்ப நேரிட்டது. இதில் பெண் ஊழியர்கள்தான் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
ஐசிஐசிஐ ஒன் சோர்ஸ் கால் சென்டரில் புகுந்த கன்னட அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்கள் நேற்று முழுமையாக மூடப்பட்டிருந்தன.













Click it and Unblock the Notifications