சந்தேகம்-மனைவி, குழந்தைகளை கொன்ற கணவன்
திருநெல்வேலி:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தகணவன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (31). இவருக்கு ராணி என்ற மனைவி,முத்துக்கிருஷ்ணன் என்ற 5 வயது மகன், அலங்காரி என்ற 3 வயது மகள் உள்ளனர்.
ராணியின் நடத்தை மீது சமீப காலமாக நாராயணனுக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைநடக்குமாம். கணவரின் கொடுமை தாங்க முடியாமல் ராணி தனது தாய் வீட்டுக்கு 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
இதனால் மன வேதனைப்பட்ட நாராயணன் அவரை போய் வீட்டுக்கு அழைத்தார். ஆனால் ராணியின் வீட்டினர், நாராயணை கடுமையாக திட்டினர்.இதையடுத்து ஊரில் பஞ்சாயத்துப் பேசி நாராயணனுடன், ராணி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
ஆனால் வீட்டுக்கு வந்த பின்னர் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல மீண்டும் நாராயணன் ராணியுடன் சண்டை போட ஆரம்பித்தார். 2நாட்களுக்கு முன்பு இந்த சண்டை உக்கிரமடைந்தது.
நள்ளிரவு 1 மணிக்கு நடந்த இந்த சண்டையின் போது ஆவேசமடைந்த நாராயணன், ராணியைப் பிடித்து சுவரில் பலமாக மோதினார். இதில் ராணிபலத்த காயமடைந்து உயிரிழந்தார். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் தலையணையால் முகத்தை அழுத்தி கொடூரமாகக்கொன்றார்.
3 பேரையும் கொன்ற அவர் விஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரையும், பிணமாக கிடந்த ராணி மற்றும் குழந்தைகளையும் பார்த்தஅக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து நாராயணனை அம்பாசமுத்திரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications