மாலைமுரசு அதிபர் மீது பண மோசடி வழக்கு!
மதுரை:முன்னாள் சபாநாயகர் சி.பா. ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு நாளிதழ் அதிபருமான பா.ராமச்சந்திரன் ஆதித்தன் மீது பண மோசடிவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடார் சமுதாயத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. இந்த வங்கியை, என்.ஆர்.ஐ.யான சிவசங்கரன் பிள்ளைவாங்கியதால் நாடார் சமுதாயத்தினர் பெரும் கொந்தளிப்படைந்தனர்.
இதையடுத்து பணம் திரட்டி மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகளை வாங்கி வங்கியை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்துபா.ராமச்சந்திர ஆதித்தன் தலைமையில் நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்க் மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பணம் வசூலித்தது. சிவசங்கரனிடம் உள்ள 67 சதவீத பங்குகளை வாங்குவதற்காக கிட்டத்தட்ட ரூ.90 கோடி பணம் வசூலிக்கப்பட்டது.
பங்குகளை வாங்குவதற்காக பணம் கொடுத்த முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரம் பங்குகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், 96 ஆயிரம் பங்குககள்தான் வழங்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து ராமச்சந்திர ஆதித்தன் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தான் கொடுத்த பணத்திற்கு உரிய பங்குகள் வழங்கப்படவில்லை. தன்னிடம்கேட்காமலேயே தனது வங்கிக் கணக்கிலிருந்து 82 ஆயிரத்து 500 ரூபாயை பங்கு முதலீட்டாளர்கள் கணக்கிற்கு மாற்றி விட்டதாகவும், இதுகுறித்துவிசாரித்து ராமச்சந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் தொடர்பாக போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அவர் நாடி வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இந்த வழக்கை விசா>த்த நீதிபதி ராஜசூர்யா, ராமச்சந்திர ஆதித்தன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றுகேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மாவட்ட எஸ்.பி. அன்பு இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் தற்போது பா.ராமச்சந்திர ஆதித்தன்,மெர்க்கண்டைல் வங்கி தலைமை அலுவலக தலைவர், செயலாளர், மதுரை மெர்க்கண்டைல் வங்கி வட்டார அலுவலக மேலாளர், உசிலம்பட்டி கிளைமேலாளர் ஆகியோர் மீது போலீஸார் ஏமாற்றுதல், பணத்தை மோசடி செய்தல், கூட்டாக சேர்ந்து சதி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இதேபோல தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் ராஜகுமார் நாடார் என்பவர், ராமச்சந்திர ஆதித்தன் மீது சென்னை மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரணிடம் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரை மத்திய குற்றப் பி>வுக்கு விசாரணைக்கு லத்திகா சரண் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்கள் மன்றத்தின் தலைவர்கள் குழு, அறங்காவலர்கள் குழு ஆகியவற்றின் ஆலோசனைக்கூட்டம் அதன் தலைவர் டாக்டர் ராஜன் தலைமையில் நடந்தது.
பின்னர் இந்த சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டாக சென்று லத்திகா சரணை சந்தித்து அவர்களும் புகார் மனுவைக் கொடுத்தனர். பின்னர் ராஜன்உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முதல் கொண்டு ராமச்சந்திரஆதித்தனிடம் பணம் கொடுத்துள்ளனர்.
மிகவும் சிரமப்பட்டு பணம் சேர்த்து பங்கு வாங்குவதற்காக அவர்கள் பணம் கொடுத்துள்ளனர். மெர்க்கண்டைல் வங்கி ராமச்சந்திர ஆதித்தனின்தனிப்பட்ட சொத்து அல்ல, அது நாடார் சமுதாயத்தின் சொத்து.
சிவசங்கரனிடம் மொத்தம் உள்ள மெர்க்கண்டைல் வங்கியின் 67 சதவீத பங்குகளை வாங்க ரூ. 90 கோடி வசூல் செய்யப்பட்டது. அதில் 80 கோடியே75 லட்சம் ரூபாயைத்தான் சிவசங்கரனின் ஸ்டெர்லிங் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். மீதப் பணமான 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்குராமச்சந்திர ஆதித்தன் கணக்கே காட்டவில்லை என்றனர்.
ராமச்சந்திர ஆதித்தன் மீது கிளம்பியுள்ள இந்த பெரும் புகார் நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications