தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
திருச்சி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து திருச்சியில் பாரதிய விவசாய சங்கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், அரை நிர்வாணப்போராட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
போராட்டத்தின்போது அவர் பேசுகையில், உடனடியாக நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 17 பாசனக் கால்வாய்களிலும் 11 மாதங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது போல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ளகடன்களையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததால் விவசாயிகள் தடையை மீறிப் போராட்டம்நடத்தப் போவதாக அறிவித்தனர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் குதித்தனர்.
இதனால் சில நிமிடங்களுக்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தி போராட்டம் நடத்த அனுமதித்தனர்.
சண்டை வேண்டாம்: மத்திய அமைச்சர்
காவிரியை மையமாக வைத்து தமிழ்நாடும், கர்நாடகமும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று மத்திய திட்டத்துறை அமைச்சர் ராஜசேகரன்கூறியுள்ளார்.
சென்னை வந்த ராஜசேகரன், சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவி>ப் பிரச்சினை 200 வருடமாக இருக்கிறது. இரு மாநிலவிவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இரு மாநிலங்களும் வரலாற்றுப் பின்னணி கொண்டவை. இரு மாநில மக்களும் சகோதர பாசத்துடன் பழக வேண்டும். இந்தப் பிரச்சினைவிவசாயிகளின் உணர்வில் கலந்த ஒன்று. இதில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது.
தீர்ப்பில் கருத்து வேறுபாடு, சாதக, பாதக அம்சங்கள் இருக்கலாம். அவற்றை சுமூகமாக பேசித் தீர்க்க முயல வேண்டும். இரு மாநிலங்களும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். இதில் அரசியல் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றார் ராஜசேகரன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications