அரசு பொருட்காட்சியில் ஆபாச சி.டி விற்பனை!
சென்னை:சென்னையில் நடந்து வரும் அரசு சுற்றுலா பொருட்காட்சியில் ஆபாச திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்த 4பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சிடிக்களைப் பறிமுதல்செய்யப்பட்டன.
சென்னை கடற்கரை தீவுத் திடலில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும். தற்போது நடந்துவரும் பொருட்காட்சியில், புதிய திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் மற்றும் ஆபாச சிடிக்கள் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவின் பேரில், போலீஸார் அதிரடி சோதனையில்இறங்கினர். இதில், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2,500 திருட்டு வி.சி.டிகள் சிக்கின.
இதில் நடிகைகளின் ஆபாச சி.டிக்களும் இருந்தன. கிராபிக்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட ஆபாச சி.டிக்களும்கிடைத்தன.
திருட்டு விசிடியை விற்றதாக அசன் குத்தூஸ் (24), கணேசன் (27), ஆனந்த் (22), சாகுல்ஹமீது (42) ஆகிய 4பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஒவ்வொரு ஆண்டும் பொருட்காட்சியில் இது போல ரகசியமாகவிற்று வருவதாகவும், அதற்காக ரூ.30 ஆயிரம் கொடுத்து கடை எடுத்து நடத்தி வந்ததும் தெ>ய வந்தது.
ஒவ்வொரு சிடியையும் 100 ரூபாய் வரை விலை வைத்து விற்று வந்துள்ளனர்.
அரசுப் பொருட்காட்சி வரலாற்றிலேயே, திருட்டு விசிடிக்கள், ஆபாச சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதைகண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications