கருணாநிதியின் போக்கு: ராமதாஸ் அதிருப்தி
விழுப்புரம்:காவரிப் பிரச்சினை, முல்லைப் பெ>யாறு அணை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழக முதல்வர் கருணாநிதியின் நிலை ஆச்சர்யம் அளிக்கிறது.இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்கும் முன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிக்கத் தவறக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்திற்குச் சாதகமான அம்சங்களும் இருக்கின்றன, பாதகமும் இருப்பதாக முதலில் கருணாநிதி கூறினார்.ஆனால் இப்போது தீர்ப்பை ஏற்க வேண்டும் என்கிறார்.
அதேபோல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், நீதிமன்றத்திற்கு வெளியே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்றுகூறினார். ஆனால் இனிமேல் கேரள அரசுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என்று பின்னர் தெரிவித்தார்.
கருணாநிதியின் நிலையில் ஏன் இந்த மாற்றம் என்பது புரியவில்லை. மேலும் தமிழக அரசின் நிலைக்கும், திமுகவின் நிலைக்கும் வேறுபாடுகள்காணப்படுகின்றன. இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்கும் முன் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அம்சங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எனவே அதன் நகலை அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், விவசாய சங்கத் தலைவர்களுக்கு தீர்ப்பின் நகலை அம்மாநில அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்லிகர் அணைப் பிரச்சினையில் இந்தியாவும், பாகிஸ்தானும் உலக வங்கி நிபுணர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. அப்படி இருக்கையில்,ஒரே நாட்டில் உள்ள தமிழகமும், கர்நாடகமும் முரண்பாடாக செயல்படுவது வேதனைக்குரியது.
அண்டை மாநிலங்களுடன் சகோதர பாசத்துடன் பழகுவோம் என்று பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. நமது உரிமைகளைப் பெறஅரசியல் ரீதியாகவோ அல்லது சட்டரீதியாகவோ நாம் போராட வேண்டும்.
ஆளுநர் மாளிகையில் உள்ள ஒரு தனி நபர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இது அரசுக்கு நல்லதல்ல. இதுகுறித்து முதல்வர்கருணாநிதிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications