கேரளாவுக்கு மட்டும் ஏன் அதிக ரயில்கள்?-அதிமுக
கோவை:சேலம் ரயில் கோட்டத்தை உடனடியாக முழுமையாக நிறுவ வலியுறுத்தியும், ரயில்வே துறையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைக்கண்டித்தும் அதிமுக சார்பில் கோவையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டப் போராட்டம் நடநத்து.
தமிழ்நாடு ஹோட்டல் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சரும், தலைமை நிலையச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் இப்போராட்டம் நடந்தது.
செங்கோட்டையன் பேசுகையில்,
பல ஆண்டுகளாக போராடியதால் தான் சேலம் கோட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோட்டம் துவங்கியும்இன்னும் (ரயில்) ஓட்டம் ஆரம்பமாகவில்லை. சேலம் கோட்டத்தைத் துவங்க கேரளாவில் எதிர்ப்புகிளம்பியுள்ளது. பாலக்காடு கோட்டத்திற்கு பெரும் வருவாய் ஈட்டித்தந்த தமிழகப் பகுதிகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காக கேரளாவில் அரசியல் கட்சியினர் புரட்சி செய்கின்றனர். ஆனால், இங்கேமுதல்வர் கருணாநிதியும், எம்.பிக்களும் மவுனப் புரட்சி செய்கின்றனர். தமிழக நலனுக்கு ஆதரவாக அதிமுகமட்டுமே குரல் கொடுக்கிறது.
சேலம் ரயில்வே கோட்டப் பிரச்னையில் மட்டுமின்றி, காவிரிப் பிரச்னை, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கேஅணை கட்டும் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என எல்லாப் பிரச்னைகளிலும் தமிழகத்திலிருந்துமுதலில் எழும் குரல் ஜெயலலிதாவின் குரலாகத் தான் உள்ளது.
சேலம் ரயில்வே கோட்டப் பணிகளும், ரயில்வே மேம்பாலப் பணிகள் அனைத்தும் தாமதமாக நடப்பதற்கு, நிதிஒதுக்காததே காரணம். இதைப் பற்றிப் பேசினால் மத்திய அமைச்சர்களின் பதவியும், மைனாரிட்டியாக உள்ளமாநில ஆட்சியும் பறிபோகும் என்றே திமுக அமைதி காக்கிறது. சேலத்தில் பெயருக்கு மட்டுமே ரயில்வேகோட்டம் துவக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் வைத்த பேக்ஸ், போன்களை மறுநாளே எடுத்துள்ளனர். கோட்ட மேலாளரையும், உதவிஅதிகாரியையும் நியமித்ததைத் தவிர வேறு வேலை நடக்கவில்லை. கோவையிலிருந்து சென்னைக்கு ஐந்துரயில்கள் மட்டுமே செல்கின்றன. ஆனால், கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு 55 ரயில்கள்இயக்கப்படுகின்றன.
கொங்கு மண்டலப் பகுதிகளை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இருகூர்-வடகோவை இருவழிப்பாதை பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. ஒண்டிப்புதூர், வாலாங்குளம், ஊத்துக்குளி ரயில்வேமேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, தமிழக நலனைப் புறக்கணிக்கிறது. மைனாரிட்டி அரசில் ஐந்துஅமைச்சர்களைப் பெற முடியாத தமிழக காங்கிரசார், தமிழகத்தில் காமராஜ் ஆட்சி அமைப்பதாகச் சொல்வதுவேடிக்கையானது என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் செ.மா.வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் மேயரும், எம்.எல்.ஏவுமான மலவரன், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications