தமிழை சொல்லி ஏமாற்றுகிறார்கள்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழ், தமிழ் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். ஜாபர்கான்பேட்டைபகுதியில் பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில்,

தேமுதிக தேய்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். கட்சி தொடங்கி ஒரு ஆண்டே ஆன நிலையில் எங்கள் கட்சியினரை இழுக்க அவர்களுக்குகான்ட்ராக்ட் தருவதாக திமுகவினர் ஆசைவார்த்தை கூறுகின்றனர். இதில் இருந்தே யாருடைய கட்சி தேய்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுமக்களை சந்திக்க அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். காவல் துறையை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு உள்ளடி வேலையில்ஈடுபடுகின்றனர். அண்ணா, பெரியார் வழி வந்த கட்சி என்று கூறுபவர்கள் கத்தியை காட்டி மிரட்டுகின்றனர்.

இப்படி கத்தியை காட்டி மிரட்டியா அண்ணாவும், பெரியாரும் அவர்களை அரசியல் செய்ய சொன்னார்கள்? எதையும் தாங்கும் இதயம் வேண்டும்என்று அண்ணா கூறியது போல் என்னிடம் எதையும் தாங்கும் இதயம் இருக்கிறது. அதனால் எப்படி மிரட்டினாலும் நான் அரசியலில் இருந்துபின்வாங்க மாட்டேன்.

மக்களை பார்த்து அரசியல் வாதிகள் பயப்பட வேண்டும். ஆனால் இன்றோ அரசியல்வாதிகளை பார்த்து மக்கள் பயப்படவேண்டியுள்ளது. அதனால்தான் மக்களை மிரட்டினால் ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். இனிமேலாவது மக்கள் தைரியமாக இருக்கவேண்டும்.

அரசியலை வியாபாரமாக வைத்து காசு சேர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அரசியல்வாதிகள் அவர்களின் குழந்தைகளை மட்டும் ஆங்கிலம்,இந்தி என்று எல்லா மொழிகளையும் படிக்க வைக்கின்றனர். ஆனால் அப்பாவி தமிழர்களின் குழந்தைகள் மட்டும் தமிழ் மட்டுமே படிக்கவேண்டுமாம். இது எப்படி இருக்கிறது?

தமிழ், தமிழ் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஒழுங்காக மருந்து கிடைப்பதில்லை. சுகாதாரம் இல்லை. பத்துரூபாய் மாத்திரைக்கு முப்பது ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

அப்துல் கலாம் கூறியது போல் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இப்போது மாநகராட்சி மருத்துவமனை முதல் எங்கு பார்த்தாலும் லஞ்சம்தலை விரித்தாடுகிறது. இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்கமுடியும்.

பெண்களால் தமிழக சரித்திரத்தை மாற்ற முடியும். இங்கே கூடியிருக்கும் பெண்கள் தீபம் சின்னத்திற்கு ஓட்டுபோட வேண்டும். நீங்க போட்டாமட்டும் போதாது, மார்க்கெட்டிற்கு செல்லும் போதும், பஸ் ஸ்டான்டிற்கு செல்லும்போதும் அங்கு சந்திப்பவர்களிடம் எல்லாம் தீபம் சின்னத்திற்குஆதரவு திரட்டுங்கள்.

மிரட்டல்களை சவாலாக ஏற்பவன் நான். அரசியல் மாற்றத்திற்கு தேமுதிகவை ஆதரியுங்கள். எங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.மாநகராட்சி செயல்பாட்டை மாற்றி காட்டுகிறேன். போராடி மக்களுக்கு நன்மை செய்வேன். நான் எதையும் சொல்ல மாட்டேன். சொன்னால்அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

எனக்கு ஓட்டுப் போடுங்கள் நான் தமிழக அரசியலை மாற்றி காட்டுகிறேன் என்றார் விஜயகாந்த்.

பின்னர் விஜயகாந்த், 130, 131, 132 ஆகிய வார்டுகளில் இரவில் விஜய்காந்த் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம்தடைபட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. ஆனால் விஜயகாந்த் தனது வாகனத்தில் இருந்தபடி அதிலிருந்த மைக் மூலம் பேசினார். அவர்பேசி முடித்து விட்டுச் செல்லும் வரை மின்சாரம் வரவே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+