கண்ணிவெடி: அம்பாரையில் 12 பேர் காயம்
கொழும்பு:இலங்கையின் அம்பாரை பகுதியில் நடந்த கண்ணி வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி 12 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்தனர்.
நேற்று இரவு அம்பாரை மாவட்டத்திலிருந்து ஒரு வேனில் பொதுமக்கள் பலர் மத்திய கண்டி மாவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்.
அப்போது அவர்கள் சென்ற வேன், கண்ணி வெடிகுண்டில் சிக்கி தூக்கி எறியப்பட்டது. இதில் 12 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 5 பேர்மஹா ஓயா மருத்துவமனையிலும், மற்றவர்கள் மஹியங்கானா மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். லேசான காயமடைந்த 7 பேர்சிகிச்சைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் விவகார இணை அணைச்சர் டாக்ட் கிம் ஹோவல்ஸ் அம்பாரைக்கு வரவிருந்த சில மணி நேரம்முன் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் ராணுவத் தாக்குதகலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்குத்தேவையான நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் ஹோவல்ஸ் இலங்கை வந்துள்ளார்.
முன்னதாக கொழும்பு வந்த ஹோவல்ஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் போரைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். விரைவில் இப்பிரச்சினையை முடிக்க முயல வேண்டும். இந்தப் போரில் யாருக்கும் வெற்றிகிடைக்காது என இரு தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஹோவல்ஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications