தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 28 அதிமுகவினர் குற்றவாளிகள்!-நாளை தண்டனை அறிவிப்பு!!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தர்மபுரியில் கோவை வேளாண்மைக் கழக மாணவிகள் பஸ்சோடு சேர்த்து அதிமுகவினரால் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28பேர் குற்றவாளிகள் என சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்.

இதில் அதிமுக நிர்வாகிகளான நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய மூன்று பேர் பஸ்ஸை எரித்ததாகவும், மாணவிகளைகொன்றதாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபணமாகி இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இவர்கள் மீது 3 மாணவிகளை கொலை செய்ததாகவும், மேலும்46 பேரை (பஸ்சில் இருந்த பிறர்) கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர். வன்முறை தாண்டவமாடினர்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு பல்கலைக்கழக பஸ்சில் வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுஇலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் அந்த பஸ்ஸை வழி மறித்தனர்.

உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீவைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர்.College bus burningமேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்றநெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுகநிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன்,வடிவேல்,

மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன்,செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

Fired college Student

தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை அதிமுக அரசு மிக அலட்சியமாக நடத்தியது. விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தினாலும்அதிமுகவினரை தப்ப வைக்க அரசும், போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக தெனாவட்டாக நீதிமன்றத்தில்நடந்து கொண்டனர்.

மேலும் போலீஸ் மற்றும் அதிமுகவினரின் மிரட்டலால் 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். (மொத்த சாட்சிகள் 22 பேர்). இதனால் இந்தக் கும்பல்மொத்தமாக வழக்கில் இருந்து தப்பிவிடும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை கோவைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதைவிசாரித்த நீதிபதி கனகராஜ் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது என்று சாடிய நீதிபதி வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு மாற்றினார்.

மேலும் அரசு வக்கீலையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் நியமித்த புதிய வழக்கறிஞரான சீனிவாசனுக்கு போதிய ஆவணங்களைத்தராமல் இழுத்தடித்தனர். மேலும் அவருக்கும் கூட மிரட்டல்கள் வந்தன. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.

Burned college busசேலம் நீதிமன்றத்தில் கோவை விவசாயக் கல்லூரி துணை வேந்தர், தர்மபுரி கலெக்டர், பஸ்சில் சென்ற ஆசிரியைகள், மாணவிகள் உள்பட 123சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. எரிக்கப்பட்டபோது பஸ்சில் இருந்த மாணவிகளும் ஆசிரியைகளும் சாட்சியம் அளித்தபோது, அந்த தீ எரிப்புசம்பவத்தை நினைவு கூர்ந்தபோது, கதறி அழுதது குறிப்பிட்டத்தக்கது. ஒரு ஆசிரியையும் சில மாணவிகளும் சாட்சியத்தின்போது மயங்கியேவிழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதிகிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், மாதேஷ், பழனிச்சாமி தவிர மற்ற 28 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனைவிவரம் நாளை அறிவிக்கப்படும்.

இவர்கள் மீது சாலை மறியல் செய்தது, பேருந்து கண்ணாடியை உடைத்தது, சட்டவிரோதமாக கூடுவது ஆகிய குற்றச்சாட்டுக்கள்நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தண்டனை விவரமும் நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இப்போது ஜாமீனில் உள்ள ரவீந்திரன், மணியப்பன் இருவரையும் உடனே கைது செய்து போலீஸ் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். மேலும்முக்கிய குற்றவாளிகளான நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கவும்உத்தரவிட்டார்.

Burned college busஇந்தத் தீர்ப்பயைடுத்து இந்த மூவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதை உடனடியாக நிராகரித்தார் நீதிபதி. தீர்ப்பையொட்டி சேலம் நீதிமன்றவளாகத்தில் கமிஷ்னர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெடல் டிடெக்டர்களும்வைக்கப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+