மதுரை கோட்டப் பகுதிகளை கேட்கும் கேரளா!
டெல்லி:சேலம் கோட்டம் அமைக்கப்படுவதால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க மதுரை கோட்டத்தின் கீழ் வரும் சில பகுதிகளை பாலக்காடுகோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கேரள எம்.பிக்கள் குழு மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பாலக்காடு கோட்டத்தைப் பிரித்து சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ரயில்வே கோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கேரளாகடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கேரள முதல்வர் அச்சுதானந்தனும் இதை அனுமதிக்க முடியாது என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், கேரள சட்டத்துறை அமைச்சர் விஜயக்குமார் தலைமையில், கேரள எம்.பிக்கள் குழு டெல்லி சென்று லாலு பிரசாத்தை சந்தித்துசேலம் கோட்டம் அமைக்கக் கூடாது என்று கோரி மனு கொடுத்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயக்குமார் பேசுகையில், சென்னை, மதுரை, திருச்சி கோட்டங்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகவேசேலம் கோட்டம் அமைக்கப்படுவதாக கேரளாவிடம் தெற்கு ரயில்வே தெரிவித்தது.
ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரவைப் பார்த்தால், சென்னை, மதுரை, திருச்சி ரயில்வே கோட்டங்களிலிருந்து எந்தப் பகுதிகளும் சேலம்கோட்டத்தில் இணைக்கப்படவில்லை.
சேலம் கோட்டத்தின் பெரும் பகுதிகள் தற்போது பாலக்காடு கோட்டத்தில் உள்ளவை. இப்பகுதிகளை அப்படியே சேலம் கோட்டத்துடன்சேர்த்தால், ஒரு கோட்டம் தனியாக செயல்படும் அளவுக்குக் கூட இருப்புப் பாதை பாலக்காடு கோட்டத்துக்குக் கிடைக்காது.
பாலக்காடு முக்கியத்துவம் இழந்து விடும், கேரளாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
சேலம் கோட்டத்தில் ஈரோடுக்கு தென்புறத்திலிருந்து காட்பாடி வரையோ, அல்லது வேறு சாத்தியமான பகுதி வரையோ சேர்க்கலாம். அப்படிசெய்யும்போது பாலக்காடு இழந்த பகுதிகளை ஈடுகட்ட, மதுரை கோட்டத்தில் உள்ள போதனூர்-பொள்ளாச்சி, பாலக்காடு-பொள்ளாச்சி ஆகியமார்க்கங்களை பாலக்காடு கோட்டத்தில் சேர்க்கலாம்.
எங்களது கோரிக்கை குறித்து தமிழக, கேரள முதல்வர்களுடன் பேசி தீர்வு காண்பதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக கூறினார்விஜயக்குமார். ரயில்வே இணை அமைச்சர் வேலுவையும் இக்குழு சந்தித்து மனு கொடுத்தது.
ஏற்கனவே தமிழகத்தின் மேற்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளை, பாலக்காடு கோட்டம் என்ற பெயரில் கேரளா ஆக்கிரமித்துள்ளது. இப்போதுமதுரை கோட்டத்தின் சில பகுதிகளையும் அது கேட்டு மத்திய அரசுக்கு யோசனை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications