ராணித் தீவுக்கு செல்லும்போது இந்திய கடற்படையிடம் பிடிபட்ட புலிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு பிடிபட்ட 5 பேரில் இரண்டு பேர் விடுதலைப் புலிகள் தான் என்று டிஜிபிமுகர்ஜி தெரிவித்துள்ளார்.

இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை அருகே உள்ள ரணித் தீவுக்கு செல்லும்போது தான் இந்திய கடற்படையினரிடம் பிடிபட்டனர்.இவர்கள் தமிழகத்திற்கு வரும் திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ரணித் தீவில்தான் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைப்பது வழக்கம். அங்கு போனபோதுதான் நமது கடலோரக் காவல் படையிடம்சிக்கியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக ரணித் தீவுக்கு செல்ல முயன்றால் இலங்கை படையிடம் சிக்கி விடுவோம் என்பதால்தான்இந்திய கடல் எல்லை வழியாக செல்ல முயன்றுள்ளனர் என்றார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடியக்கரை அருகே சென்று கொண்டிருந்த படகை தடுத்து நிறுத்திய கடலோரக் காவல் படையினர் அந்தப் படகில்பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டு அதிர்ந்தனர். ஆயுதங்களைப் பறிமுதல் செய்த அவர்கள் அதில் இருந்த 5 பேரையும் கியூ பிரிவுபோலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் ஐந்து பேரையும் கைது சய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அடுத்தடுத்துஆயுதக் கடத்தல் நடப்பது தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதையடுத்து நேற்று மாலை 13 மாவட்ட எஸ்.பிக்களுடன் டிஜிபி முகர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஆயுதக்கடத்தலைத் தடுக்கவும், விடுதலைப் புலிகள் ஊடுறுவலை நிறுத்தவும் எடுக்கத் தேவையான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோரப் பாதுகாப்புப்பணிக்காக கூடுதல் போலீஸாரை நியமிக்கவும், கூடுதல் வாகனங்களைக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலோர நுண்ணறிவுப் பிரிவினர் ஏற்கனவே கடலோரக் கிராமங்களை கண்காணித்து வருகின்றனர். சைக்கிளில் சென்றும், கால்நடையாக சென்றும்அவர்கள் தகவல் சேக>க்கின்றனர். மொத்தம் 300 போலீஸார் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 60 சோதனைச் சாவடிகள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக கடலோரத்தில் 12 காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த காவல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் 2 ரோந்துப் படகுகள்வழங்கப்படும். 12 டன் எடை மற்றும் 5 டன் எடை கொண்ட படகுகளாக அவை இருக்கும்.

தமிழகத்திற்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை. அதை அனுமதிக்கவும் மாட்டோம். அவர்களுக்குத் தேவையான பொருட்களை கடத்திச்செல்வோர் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விடுதலைப்புலிகளின் தளம் எதுவும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தை ஒரு வழியாகமட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இங்கு பிடிபட்ட வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல.

கோடியக்கரை அருகே பிடிபட்ட ஐந்து பே>ல் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மாநாபன் ஆகியோர் இலங்கையைச்சேர்ந்தவர்கள். ராமச்சந்திரன் சாயல்குடியைச் சேர்ந்தவர்.

அருமைநாயகம் புருஷோத்தமன் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர், சிவபத்மநாபன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் டிவைராக இருப்பவர்.ஆறுமுகம் சமையல்காரர், சகாயம் பொருட்களை ஏற்றி இறக்கும் பணியைச் செய்பவர். ராமச்சந்திரன் பொருட்களை கடத்துவதற்கு உதவியாகஇருந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே வெடிகுண்டு வயர்களை கடத்தியதாக வழக்கு உள்ளது.

சிவபத்மநாபன் 1999ம் ஆண்டு அகதியாக வந்து 2003 வரை முகாமில் தங்கியுள்ளார். பின்னர் இலங்கை போய் விட்டார்.

இவர்களிடமிருந்து இலங்கையில் உள்ள ரேஷன் கடையில் வாங்கப்பட்ட 17 அரிசி மூட்டைகள், 7 சர்க்கரை மூட்டைகள், காய்கறி, தானியங்கள்,மளிகை சாமான்கள், உப்பு, 100 தேங்காய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 33 மூட்டைகளில் இவை இருந்தன.

இதுதவிர ஏ.கே.56 ரக துப்பாக்கி, அதில் பயன்படுத்தப்படும் 126 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், மனித வெடிகுண்டு ஜாக்கெட், சயனைடுகுப்பிகள், 8 டிரம் நிறைய திரவ வெடிபொருள், சாட்டிலைட் போன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சில தகவல்கள் கிடைத்துள்ளன. தீவிர விசாரணைக்குப் பின்னர் முழுத் தகவல்களும் தெரியவரும்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்துள்ளனர். பிடிபட்டபோது கடலூர் செல்வதாக பொய் கூறியுள்ளனர். இலங்கை அருகே உள்ளரணித் தீவு என்ற தீவுக்கு செல்வதற்காக இவர்கள் படகில் வந்துள்ளனர். தமிழகத்திற்கு இவர்கள் வரும் திட்டம் ஏதும் இல்லை.

ரணித் தீவில்தான் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைப்பது வழக்கம். அங்கு போனபோதுதான் நமது கடலோரக் காவல் படையிடம்சிக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக ரணித் தீவுக்கு செல்ல முயன்றால் இலங்கை படையிடம் சிக்கி விடுவோம் என்பதால்தான் இந்திய கடல் எல்லைவழியாக செல்ல முயன்றுள்ளனர்.

இவர்கள் பிடிபட்டதால் தமிழகத்துக்கு எந்த அபாயமும் இல்லை. பிரச்சினையும் இல்லை. இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்படுவதுவாடிக்கையானதுதான். 1991 முதலே இது நடந்து வருகிறது. இலங்கையில் சண்டை நடக்கும்போது இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்படும்.

இருப்பினும் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படாத வகையில், நமது மாநில கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றார்முகர்ஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+