அவமானமும் ஜெயலலிதாவும்-கருணாநிதி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயல்படுவோம் என்று சொன்னது மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிக்கூட்டத்திலும் பங்கேற்று அதை செயல் மூலமும் காட்டினார்கள். இந்த ஒற்றுமை உணர்வு, கர்நாடகத்தில் வெறியாட்டம் போடுகிற சிலவன்முறையாளர்களுக்கு சவாலாகும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: உள்ளத்தால் ஒருவரே மற்றுடலினால் பலராய் காண்பார். அவர்களை எங்கே கண்டீர்?

பதில்: தமிழர் வாழ்வாதார பிரச்சனையான காவிரிப் பிரச்சனைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கண்டேன்.

கேள்வி: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அழைக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்கிறோம் என சொல்லிஇரண்டு மதிமுகவினர் இடையில் வெளியே சென்று விட்டார்களே?

பதில்: அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு காவிரிப் பிரச்சனையில் கடமையாற்றிய கட்சிகள் எவை எவை என்பதைப் பார்த்தால் பெரும்பாலானகட்சிகள் ஒரு காலத்தில் ஒரு கட்சியிலிருந்து பிரிந்து சென்ற மற்றொரு கட்சி தான்.

உதாரணமாக கம்யூனிஸ்டு கட்சியாக இருந்து பிரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்தி, திராவிட கழகம், திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்த திமுக கழகம், திமுக கழகத்திலிருந்து பிரிந்த அதிமுக, மதிமுக, அதிமுகவிலிருந்து பிரிந்த எம்ஜிஆர் கழகம், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து பிரிந்த த.மு.மு.கழகம் எல்லாருமே அனைத்துக் கட்சிக் கூட்டதிற்கும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மதிமுகவின் இந்த இரண்டு பேர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் நாம் கட்சிகளாகப் பிரிந்திருந்தாலும் காவிரிப் பிரச்சனையில் கடமைஉணர்வுடன் ஒன்று பட்டுச் செயல்படுவோம் என்று சொன்னது மட்டுமல்ல, செயல் மூலமும் காட்டினார்கள். இந்த ஒற்றுமை உணர்வு கர்நாடகத்தில்வெறியாட்டம் போடுகிற சில வன்முறையாளர்களுக்கு காந்திய வழியில், அண்ணா வழியில் ஒரு சவாலாகவும் விளங்கியது என்பேன்.

கேள்வி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றனவே?

பதில்: விவாதமென்பதால் ஒவ்வொரு கட்சியும் உணர்வு பூர்வமாகவும், உள் நோக்கமின்றியும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.அவற்றையெல்லாம் குறித்துக் கொண்டு, தொகுத்து எழுதி வெளியிட்டுள்ள தீர்மானத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களின் நடுநிலையானதும்,நியாயமானதுமான கருத்துக்களைக் கொண்ட தீர்மானம் தான் இது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி ஆணையில் உள்ள சாதக, பாதகங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்கு பின், இந்த ஆணையின்மீது தேவையான விளங்களையும், அதை முழுமையாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு, சட்டவல்லுனர்களுடனும்மற்றும் பொறியாளர்களுடனும் கலந்தாலோசித்து அவர்கள் வழங்கும் ஆலோசனைக்கேற்ப,

தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 1956ம் ஆண்டு பன் மாநில நதி நீர் தாவாச் சட்டம் பிரிவு 5(3)ன் கீழ் ஒரு மனுவினை காவிரிநடுவர் மன்றத்தின் முன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டுமென அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்த கூட்டம் முடிவு செய்தது.

கேள்வி: சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற 67 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தலில், வாக்குப் பதிவு மந்தமாக நடந்தற்கு திமுக ஆட்சியைமக்கள் வெறுப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே?

பதில்: எதையும் ஆய்ந்தறிந்து பேச வேண்டும், எழுத வேண்டும், அறிக்கை விட வேண்டும். சென்னை மாநகராட்சியில் கடந்த 2001ம் ஆண்டுநடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு முதல் கொண்டு, இப்போது நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரை எத்தனை சதவீதம் வாக்குகள்என்ற விபரத்தை ஆதாரபூர்வமாகத் தந்துள்ளேன். இதுவரை அறியாதோர் இனியேனும் அறிந்து கொள்க.

1996ல் திமுக ஆட்சியில் சென்னையில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவு 45.75%. 2001ல் அதிமுகஆட்சியில் சென்னையில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவு 36.11%.

2006ல் திமுக ஆட்சியில் சென்னையில் அனைத்து வார்டுகளுக்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு சதவிகிதம் 55.03% 2007ல்திமுக ஆட்சியில் சென்னையில் 67 வார்டுகளுக்கும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, மதிமுக புறக்கணித்த நிலையில் வாக்குப்பதிவுசதவிகிதம் 30.76%

கேள்வி: 2001ல் மாநகராட்சி தேர்தலில் அதிமுக அராஜகம் செய்தது என்பது உண்மையானால் பிறகு எப்படி மு.க.ஸ்டாலின் மேயாராகதேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஜெயலலிதா கேட்டுள்ளாரே?

பதில்: அந்தத் தேர்தலில் நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடத்த திட்டமிட்டு அந்த மோசடியை பாதியில் நிறுத்தச் செய்ய திமுக,ராஜ்பவன் வரையில் தொடர்பு கொண்டு, அதன்பிற்கு 5,000 வாக்கு வித்தியாசத்திலேதான் ஸ்டாலினுக்கு அந்த வெற்றி கூட கிடைத்தது.

ஸ்டாலின் மேயராக இருப்பதைத் தடுக்க புது சட்டமே கொண்டு வந்த புண்ணியவதி ஆயிற்றே ஜெயா அம்மையார். 2001 மாநகராட்சி தேர்தல்அராஜகங்களை பழைய ஏடுகள் பட்டியலிட்டிருக்கின்றனவே. அவற்றைப் படித்தால் உண்மை புரியுமே. அப்போது பத்திரிகையில் வாக்குஎண்ணுமிடத்தில் வானளாவிய வன்முறை சூது, சூழ்ச்சி, மோசடி எந்று செய்திகள் வந்ததைப் படிக்கவில்லையா?

கேள்வி: எதற்கொடுத்தாலும் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறாரே?

பதில்: அரசாங்கச் சொத்துக்களை அடி மாட்டு விலை கொடுத்து வாங்கி அகப்பட்டுக் கொள்வார். வாங்கிய நிலத்தை அரசிடம் திருப்பி கொடுஎன்று நீதிமன்றம் கட்டளையிடும். அதற்கெல்லாம் அவமானப் பட்டு ராஜினாமா செய்ய மாட்டார். போலி கையெழுத்து போட்டு நீதிமன்றத்தைஏமாற்றிட முனைவார்.

அதை நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் தன் தவறுக்கு வருந்த மாட்டார். இந்த ஜெயலலிதா தான் என்னை பார்த்து அதுவும் நீதிமன்றகருத்திக்கேற்ப சுமார் 100 வார்டுகளில் வெற்றி பெற்ற நமது அணியினரை ராஜினாமா செய்யுமாறு சொல்லி புதிய தேர்தல் அறிவித்த என்னைப்பார்த்து ராஜினாமா செய்ய என்று கட்டளையிடுகிறார்.

கேள்வி: நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில்ல மாநிலத் தேர்தல் ஆணையரை சந்திரசேகரை மட்டும் சில கட்சிகள் குறி வைத்து தாக்குவது?

பதில்: மாநிலத் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன், தம்பி துரைமுருகனின் உறவினர் என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. இப்போது சந்திரசேகரன்திமுக உறுப்பினர் என்று ஒரு கதை ஜோடிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு அதிகாரி என்ற முறையில் அதுவும் தேர்தல் அதிகாரி என்ற முறையில்தமிழகத்தில் 1.33 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிப் பொறுப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை மிக அமைதியாக நடத்தி கொடுத்தவர்தான்சந்திரசேகரன்.

ஏதோ சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடைபெற்ற ஒரு சில வன்முறை நிகழ்வுகளுக்கு அவர்தான் பொறுப்பு என்பது போல ஒரு குற்றச்சாட்டு.அதற்கும் மறு தேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆணைக்கு முன்பே சென்னையில் சுமார் 100இடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்தியுள்ள திமுக ஆட்சியையும், தேர்தல் ஆணையரையும் பாராட்டாமல் கற்பனை செய்து கொண்டு காழ்ப்புகாட்டுவது என்பது கவலைக்குறியது.

கேள்வி: டெல்லியிலிருந்து பாகிஸ்தான் லாகூருக்கு புறப்பட்ட ரயில் வழியில் வெடி வைத்துக் கொளுத்தப்பட்டு சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளகொடுமை பற்றி?

பதில்: மனித சமுதாயத்தில் வாய்மை வற்றி விட்டதோ?

மனசாட்சியெனும் தூய்மை மறைந்து விட்டதோ?

மனிதநேயத் தாய்மை உறைந்து விட்டதோ?- உலகில்

மதமாச்சர்யக் கொடுமை மட்டுமே நிறைந்து விட்டதோ?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+