உபி சட்டசபைக்கு ஏப்ரல்-மே 7 கட்ட தேர்தல்
டெல்லிஒரு வழியாக உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 7 கட்டமாக தேர்தல்நடைபெறுகிறது.
உ.பி. மாநில சட்டசபையின் ஆயுட்காலம் மே 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால்அதற்குள் முலாயம் சிங் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திவநதன.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்த 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில், மாநில அரசியல், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் ராஜேஷ்வர், மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்தார். இதனால்முலாயம் சிங் அரசு டிஸ்மிஸ் செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு இடது சாரிக் கட்சிகள் கடும்ஆட்சேபனை தெரிவித்தன.
இந்த நிலையில், தற்போது உ.பி. சட்டசபைக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமிஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் 7ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்.
அடுத்து 13, 18, 23,28 மே 3, 8 ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை மே 11ம் தேதி தொடங்கும்.
தேர்தலில் 11 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் உடனடியாகஅமலுக்கு வருகின்றன.
இந்தத் தேர்தலோடு மிர்ஸாபூர், ராபர்ட்ஸ்கஞ்ச், பில்ஹூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்றார்கோபாலசாமி.
7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதறகு முதல்வர் முலாயம்சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து கொடுத்து வந்த ஆதரவை முலாயம் சிங கட்சி விலக்கிக் கொண்டுள்ளது. இக்கட்சிக்குலோக்சபாவில் 38 எம்.பிக்கள் உளளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதனால் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications