ப்ளஸ் 2 தேர்வு- மிகக் கடும் கட்டுப்பாடுகள்!
சென்னை:பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யும் மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியில்மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிளஸ் டூவில் பெறும் மதிப்பெண்களை வைத்தே உயர் கல்வி என்ற சூழல் உருவாகியுள்ளது. இந் நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில்கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாணவ, மாணவியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்க பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பிரசுரங்களில் உள்ள விவரம்:
1. தேர்வு எழுதும் மாணவர்கள் சரியாக 9.45க்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.
2. காலை 10.15 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் சம்மந்தப்பட்ட மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
4. வினாத்தாளை வெளியில் அனுப்பினாலோ, தூக்கி வெளியில் வீசினாலோ அந்த மாணவர் 6 தொடர் தேர்வு அல்லது 3 ஆண்டு தேர்வு எழுதஅனுமதிக்கபட மாட்டார்கள்.
5. தேர்வின் போது ஒழுங்கீனமாக நடந்து கொள்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்.
தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான அறிவுரை:
1. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் ஆகிய 6 பாடத் தேர்வுகளுக்கு வேறு பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.
2. ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் பெயரை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.
3. பறக்கும் படை அமைத்து தேர்வை கண்காணிக்க வேண்டும். அது தவிர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் தனிப் பறக்கும்படையும், மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் சிறப்பு பறக்கும் படையும் அமைக்க வேண்டும்.
4. பறக்கு படையில் பணியாற்றும் உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications