சிறையில் பெண் கைதிகளுக்கு எழுத-படிக்க பயிற்சி!
சேலம்:சேலம் மத்திய சிறையில் பெண் கைதிகளுக்கு எழுத படிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறைக்கு வரும் பெண்களில் பெரும்பலானவர்களுக்கு தனது பெயரை கூட எழுத தெரிவதில்லை. இதனால் தமிழக அரசு சிறைக்குள்ளேயே கல்விகற்றுக் கொடுக்கும் முறையை முதன் முறையாக சேலம் மத்திய சிறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் நாராயணமூர்த்தி கூறுகையில்,
தற்போது சிறையில் இருக்கும் பெண்கைதிகளில் பலருக்கு எழுத படிக்க தெரிவதில்லை. இப்போது அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின்மூலம் அவர்கள் சிறையை விட்டு வெளியே செல்லும் போது தங்கள் பெயரை எப்படி எழுதுவது என்ற அளவுக்காவது தெரிந்து கொண்டுசெல்கின்றனர்.
இந்த திட்டம் இப்போது சேலத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாளடைவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்கள்சிறைகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
