நாளை மறுநாள் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்
சென்னை:தமிழகத்தில் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நாளை மறுதினம் தொடங்குகிறது. சுமார் 6.6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் எழுத்துத் தேர்வு தொடங்குகிறது. 4,500 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்தேர்வெழுத 1,530 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்தாகியுள்ள நிலையில் பிளஸ் 2 மதிப்பெண்களை வைத்தே மாணவர்களின்எதிர்கால உயர் கல்வி நிர்ணயிக்கப்படவுள்ளது. இதனால் இந்த பொதுத் தேர்வுகள் மிக மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தேர்வுத் துறை சார்பிலும் பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு தேர்வு மையங்கள்கண்காணிக்கப்படவுள்ளன.
தேர்வில் முறைகேடாக நடக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. விடைத்தாளை மாற்றுவது போன்ற செயல்களில்ஈடுபடும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் எல்லா மாவட்டங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications