சென்னையில் இன்னொரு மாமா கைது: காரில் விபச்சாரம்-கர்ப்பிணியையும் விடாத கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கர்ப்பிணிப் பெண்களையும் கூட விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பெரும் பணம் சம்பாதித்து வந்த விபச்சார புரோக்கரை போலீஸார் வளைத்துப்பிடித்துள்ளனர்.

சென்னை அருகே நந்தம்பாக்கம் பகுதியில் சொகுசு காரில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துஇன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீஸ் படை தீவிரக் கண்காணிப்பில் இறங்கியது.

Santhosh and Parthasarathyபோரூர் பகுதியில், ஒரு சான்ட்ரோ காரை போலீஸார் பார்த்தனர். அந்தக் கார் மீது சந்தேகம் எழவே அதை நிறுத்த முயன்றனர். ஆனால் கார்வேகமாக சென்றது. இதையடுத்து போலீஸார் காரை துரத்தினர். வேகமாக சென்ற சான்ட்ரோ சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்தில்சிக்கியது.

காரிலிருந்த பார்த்தசாரதி மற்றும் டிரைவர் சந்தோஷ் ஆகியோர் வேகமாக ஓட முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.அந்தக் காரில் பூஜா என்ற பெண்ணும் இருந்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பார்த்தசாரதி ஒரு விபச்சாரப் புரோக்கர். கிட்டத்தட்ட கன்னட பிரசாத்அளவுக்கு இவரும் தொழிலை செய்து வந்துள்ளார். ஆனால் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் சீரும், சிறப்புமாக தொழில் பார்த்துவந்துள்ளார்.

இவரது ஸ்டைலே தனி. அதாவது சொகுசு காரில் அழகிகளை ஏற்றிக் கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு காரை விடுவார். அங்கு ஆட்களைப்பிடித்து காருக்குள் அனுப்பி கசமுசாவுக்கு ஏற்பாடு செய்வார். இவரது காரில் பெட்ரோல் இல்லாமல் கூட போகுமாம், ஆனால் அழகிகள் இல்லாமல்ஒரு நாள் கூட கார் சாலையில் ஓடாதாம்.

யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக காரின் முன்பக்க கண்ணாடியில் வக்கீல்களின் காருக்குரிய அடையாள ஸ்டிக்கர்கள் மற்றும்டாக்டர்களுக்கான ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்திருப்பாராம் பார்த்தசாரதி.

விபச்சார புரோக்கராக மாறுவதற்கு முன்பு அவர் கள்ள நோட்டு பிசினஸில் தீவிரமாக இருந்துள்ளார். அதில் சிக்கி கைதாகி சிறைக்கும் சென்றார்.அப்போதுதான் இதை விட ரிஸ்க் குறைவான விபச்சாரத் தொழிலை மேற்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து அதில் குதித்தாராம்.

காரில் மீட்கப்பட்ட பெண் ஒரு நடன அழகி. ஹோட்டல்களில் டான்ஸ் ஆடுபவர். ஆனால் மெயின் தொழில் விபச்சாரம்தான்.

இதுதவிர ராமாவரம் பகுதியில் ஒரு பங்களாவிலும் விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளார் பாச்சு (இவரை இப்படித்தான் கூட இருப்பவர்கள்கூப்பிடுவார்களாம்). இங்கு பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிகளை தங்க வைத்துள்ளார்பார்த்தசாரதி.

அந்தப் பங்களாவிலிருந்து சங்கீதா, விஜயா ஆகிய இரு அழகிகளை போலீஸார் மீட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் விஜயா தற்போது 4மாத கர்ப்பமாக உள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் இவர்.

சென்னையைச் சுற்றிப் பார்க்கலாம் வா என சென்னைக்கு கூட்டி வந்துள்ளார் பார்த்தசாரதி. பின்னர் அவரை விபச்சாரத்தில் தள்ளி விட்டார்.கர்ப்பிணியாக இருந்த அவரை ஈவு இரக்கமின்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். பிடிபட்ட 3 பெண்களும் கட்டாயப்படுத்தப்பட்டுவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. எனவே அவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

பார்த்தசாரதியை போலீஸார் பிடித்தபோது அவரது உதவியாளர் சாதலி என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் வலைவிரித்துள்ளனர்.

விபச்சார புரோக்கர்கள் வரிசையாக பிடிபட்டு வருவதைப் பார்க்கும்போது, சென்னை மாநகரம், மாமா நகரமாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம்எழுகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+