கிரீமி லேயரை நீக்க கூடாது: தமிழக அரசு
டெல்லி:பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரை நீக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
வாய்ஸ் என்ற பொது நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 69% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கிரிமி லேயர் எனப்படும் பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்கள் இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்படவில்லை.இதை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு ரு பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்துள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும் சட்டம் 1980ம் ஆண்டே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும்போது கிரீமி லேயரை நீக்க வேண்டும் என்கிறார்கள்.
கிரீமி லேயரை கண்டறிவது மிகவும் கடினம். இடஒதுக்கீட்டில் கிரீமி லேயரை கண்டு பிடித்து நீக்கவில்லை என தமிழக அரசு மீதுள்ள குற்றச்சாட்டில்ஆதாரங்கள் புள்ளி விவரங்கள் இல்லை. அப்படி செய்வதால் உண்மையில் சலுகை தேவைப்படுகிறவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனகூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்துக்கு பதில் தாக்கல் செய்யுமாறு வாய்ஸ் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications