வெஸ்ட் இண்டீஸ் சென்றது இந்திய அணி!

Subscribe to Oneindia Tamil

மும்பை:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பையிலிருந்துமேற்கு இந்தியத் தீவுகளுக்குக் கிளம்பிச் சென்றது.

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பைக்கிரிக்கெட் போட்டி வந்தே விட்டது. இன்னும் 10 நாட்களில் அணல் பறக்கும் போட்டிகள் தொடங்கவுள்ளன.

கடந்த முறை கங்குலியின் கைக்கு அருகே வந்த கோப்பை, ஆஸ்திரேலியாவில் தட்டிப் பறிக்கப்பட்ட ஏமாற்றம்இன்னும் ரசிகர்கள் மனதிலிருந்து விலகவில்லை.

இந்த நிலையில் இம்முறை கண்டிப்பாக கோப்பையை வெல்ல முடியும் என்று இந்திய ரசிகர்கள் ஆணித்தரமாகநம்புகிறார்கள். இதே நம்பிக்கைதான் நமது வீரர்களிடமும் உள்ளது.

இந்த நிலையில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக கேப்டன் ராகுல் டிராவிட்தலைமையிலான இந்திய அணி நேற்று இரவு மும்பையிலிருந்து மேற்கு இந்தியத் தீவுகளுக்குக் கிளம்பிச்சென்றது.

இந்தியா இதுவரை ஒரே ஒரு முறை (1983) மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளது. கபில் தேவ்தலைமையிலான அந்த அணி வலுவான மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்திஉலகையே ஆச்சரியப்பார்வையில் மூழ்கடித்தது.

தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு நம்பிக்கையுடன் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்தியவீரர்கள் கிளம்பிச் சென்றுள்ளனர்.

இந்திய அணி சிறப்பாக விளையாடி, கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்பல்வேறு விதங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பல பகுதிகளில் சிறப்பு யாகங்கள்நடத்தப்பட்டுள்ளன. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள்நடத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+