பிளஸ்டூ தேர்வு துவக்கம்-வினாத்தாளில் குளறுபடி
சென்னைதமிழகம் மற்றும் புதுவையில், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. ஆனால், ரத்துசெய்யப்பட்ட பாடப் பகுதியில் இருந்து கேள்வி கேட்டதால் டூ மாணவ, மாணவிகள் குழப்பமடைந்தனர்.
பள்ளி இறுதிப் படிப்பான பிளஸ் டூ தேர்வு இன்று காலை தொடங்கியது. 21ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.மொத்தம் 5,62,710 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தவிர 50,000 தனித் தேர்வர்களும் பரிட்சை எழுதுகின்றனர். இதற்காக1,530 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 134 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.
குளறுபடி: மாணவர்கள் குழப்பம்
ஆனால், வினாத் தாளின் பாகம் 2ல் 4 மதிப்பெண்களுக்கு 3 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் 2ம் கேள்வியாக வினை திட்பம் பற்றிவள்ளூவர் கூறுவதை எழுதுக? என்று கேட்கப்பட்டு இருந்தது.
இந்த வினை திட்பம் அதிகாரம் தமிழ் பாடத் திட்டத்தில் இருந்து ரத்து செய்யப்பட்ட பகுதி என மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனால் 4 மதிப்பெண்கள் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மாணவர்கள்கோரியுள்ளனர்.
இதற்கிடையே சிபிஎஸ்இ வழிக் கல்வி பயிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் இன்று தொடங்கியது. இதில், நாடு முழுவதும் 12.07லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications