நெல்லை டூ குமரி ரயில் பாதை: மதுரைகோட்டத்தில் இணைக்க வைகோ கோரிக்கை
சென்னைதிருநெல்வேலி - கன்னியாகுமரி இடையிலான ரயில் பாதையை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:1980ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில்வே பகுதிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரம்கோட்டத்துடன் இணைக்கப்பட்டன.
இவற்றை மதுரை கோட்டத்தில் இணைக்க கடந்த 27 ஆண்டுகளாக தமிழக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதுஏற்கப்படாமலேயே உள்ளது.
தமிழகப் பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதால் தமிழக மக்களுக்கும், ரயில்வே தொழிலாளர்களுக்கும் அளவற்ற பிரச்சனைகளைஉருவாக்கி வருகிறது. இப்பிரச்சனையை தீர்க்க மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நான் பலமுறை பேசியுள்ளேன்.
2001ம் ஆண்டில் நான் நேரில் இதுகுறித்து முன்னாள் ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமாரிடம் மனு கொடுத்து விளக்கியுள்ளேன். சாதகமாகநடவடிக்கை எடுப்பதாக அவர் அப்போது தெரிவித்தார்.
திருவனந்தபுரம் கோட்டத்தில் தற்போதுள்ள திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள சுமார் 80 கி.மீ ரயில்வே பகுதிகளைமதுரை கோட்டத்துடன் உடனடியாக சேர்த்திட வேண்டும்.
அதே போல தற்போது செங்கோட்டைக்கும், கொல்லத்திற்கும் இடையே உள்ள ஏறத்தாழ அதே தூரத்தைக் கொண்ட கேரள மாநிலப் பகுதிகளைமதுரை கோட்டத்தில் இருந்து திருவனந்தபும் கோட்டத்திற்கு மாற்றிட வேண்டும்.
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற தமிழ ரயில்வே பகுதிகளை உள்ளடக்கிய சேலம் கோட்டத்தை அமைக்க ரயில்வே வாரியத்தால்அண்மையில் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னமும் அமலாக்கப்படவில்லை.
ரயில்வே வாரியம், சேலம் கோட்டம் அமைப்பதற்கு கட்டளையிட்ட பிறகும், கேரள மாநிலத்தில் உள்ள தமிழ் நாட்டு பகுதிகளில் உள்ள ஏசிசிசிமெண்ட ஆலை, வாளையாறு சிமெண்ட ஆலை, மங்களூர் துறைமுகம் போன்றவை இன்னும் கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்தில் தான்உள்ளன.
எனவே கேரள மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அச்சப்படுத்துவதற்கான காரணம் ஏதுவம் நிச்சயமாக இல்லை. நீண்ட நெடுங்காலமாகதீர்க்கப்படாமல் உள்ள சேலம் கோட்ட பிரச்சனையையும், நெல்லை, குமரி பிரச்சனையையும் விரைந்து தீர்த்து தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளகொந்தளிப்பையும், அதிருப்தியையும் போக்கிட வேண்டுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications