கொலுசுக்காக 2 வயது குழந்தை படுகொலை!
கோவை:கோவை நகரில் கொலுசு, தங்க தாயத்தை திருடுவதற்காக இரண்டரை வயதுக் குழந்தையை கடத்திக்கொடூரமாக கொலைசெய்து பிணத்தை சாக்கடையில் போட்டுச் சென்ற பாதகர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ், தனது குடும்பகத்துடன் கோவைகவுண்டம்பாளையம், எம்.ஜி.ஆர் நகரில் வசதித்து வருகிறார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவி உள்ளார். 4வயதில் பிரதீப் என்ற மகனும், தீபா என்ற இரண்டரை வயது மகளும் உள்ளனர்.
![]() |
வீட்டில் முறுக்கு சுட்டு கடைகளுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார் நாகராஜ். இந்த நிலையில், மதியம்வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த தீபாவைக் காணவில்லை.தேடிப் பார்த்தும் அவள்கிடைக்காததால், போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில், தீபா பிணமாக கிடந்தாள். அவளதுகழுத்தில் இருந்த தங்கத் தாயத்து, காலில் கிடந்த கொலுசு, இடுப்பில் கிடந்த வெள்ளி அரைஞான் கயிறுஆகியவை காணவில்ல.
இவற்றைத் திருடிக் கொண்ட பாதகர்கள், அந்தப் பிஞ்சுக் குழந்தையை கழுத்தை கயிற்றால் நெரித்துப்படுகொலை செய்துள்ளனர். சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த் என்ற சிறுவன், சக நண்பர்களின்விளையாட்டுத்தனத்தால் தேவையில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தான்.
அதே போல வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த தீபாவும் அல்ப திருட்டுக்காக உயிரிழந்துள்ளசம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications